வீடியோ காலில் வந்த நிர்வாண பெண்.. இதெல்லாம் பொழப்பா ? இளைஞர் செய்த அந்த காரியம்

Published : Jul 15, 2022, 05:41 PM IST
வீடியோ காலில் வந்த நிர்வாண பெண்.. இதெல்லாம் பொழப்பா ? இளைஞர் செய்த அந்த காரியம்

சுருக்கம்

வீடியோ காலில் நிர்வாணமாக வந்த பெண்ணின் அழைப்பை துண்டித்த பின்பு மார்பிங் செய்யப்பட்ட படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு அடுத்த ஆலத்தூரில் உள்ள இளைஞர் ஒருவருக்கு, வீடியோ கால் வந்துள்ளது. குடும்பத்தினர் யாரோ புதிய எண்ணில் இருந்து வீடியோ கால் செய்ததாக நினைத்து அந்த இளைஞர் அந்த வீடியோ அழைப்பை அட்டென்ட் செய்துள்ளார். அந்த அழைப்பை எடுத்தவுடன், அதில் நிர்வாண கோலத்தில் பெண் ஒருவர் தோன்றியுள்ளார். 

அந்த இளைஞர் உடனே பதற்றம் அடைந்துள்ளார். உடனே அந்த அழைப்பினை துண்டித்துள்ளார். அடுத்த சில நொடிகளில் இளைஞருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. அதனை பார்த்த இளைஞருக்கு தூக்கி வாரிப்போட்டது போல ஆகிவிட்டது.அந்த இளைஞர் ஒரு  பெண்ணுடன் இருக்கும் நிர்வாணப் படத்தை (மார்பிங்) வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..எது தாழ்ந்த சாதி ? சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு !

அதுமட்டுமின்றி ரூபாய் 10,000 அனுப்பவில்லை என்றால் படத்தை தனது நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் போலீசில் புகார் செய்துள்ளார். எந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்ததோ அந்த எண்ணை போலீசார் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

ஏனென்றால், இது இணைய அமைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் கணக்கு என்பது கண்டறியப்பட்டது. பணத்தை அனுப்ப மாட்டேன் என்று பதில் அளிக்குமாறும், போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் போலீசார் இளைஞரிடம் தெரிவித்துள்ளனர்.வீடியோ காலில் நூதன முறையில் மோசடி செய்யும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மெட்ரோ ரயிலில் இளைஞனுக்கு ‘தர்ம அடி’ போட்ட இளம்பெண்..வைரல் வீடியோ - எதற்கு தெரியுமா ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்