பிரசவம் பார்க்க வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்அம்மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.
பிரசவம் பார்க்க வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அம்மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.
உலகில் எத்தனையோ துறையில் பணிகள் இருந்தாலும் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படும் துறை ஒன்று உண்டென்றால் அது மருத்துவத்துறையாகத்தான் இருக்கும். கடந்த காலங்களில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது பலரின் உயிரை காப்பாற்றி மருத்துவர்கள் அதை நிரூபித்தும் காட்டினார். இப்படிப்பட்ட புனிதமான தொழிலுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரேசில் நாட்டில் மருத்துவர் ஒருவர் செயல்பட்டுள்ளார்.
பிரசவத்தின்போது அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண்ணுடன் அவர் உடலுறவு மேற்கொண்டுள்ளார். அவர் மயக்கவியல் நிபுணர் என்பதால் அந்த பெண்ணுக்கு மயக்கம் கொடுத்து தனி அறையில் உல்லாசம் அனுபவித்துள்ளார். இது அந்த அறையில் பொறுத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவானதை அந்த காட்சிகளின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: மகளின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூர தாய்.. வித விதமாக டார்ச்சர் செய்து சைக்கோத்தனம்.
முழு விவரம் பின்வருமாறு:- பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ டா-முல்ஹர் என்ற மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார் Giovanni Quintella Bejera (32) வயதான இவர் கடந்த சில மாதங்களாக அந்த மருத்துமனையில் பணியாற்றி வருகிறார், இந்நிலையில் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு மயக்கவியல் நிபுணரான பெஜேரா மயக்க மருந்து கொடுத்து அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
இது அந்த அறையில் இருந்த ரகசிய கேமராவில் பதிவானது, இந்த காட்சிகளை பார்த்த மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரில் பேரில் பெஜேரா வை ரியோடி ஜெனிரோ போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: பள்ளி மாணவி 10 மணி நேரம் மாறி மாறி கூட்டு பலாத்காரம்.. வேலை முடிந்ததும் சாலையில் தூக்கி வீசப்பட்ட கொடூரம்.!
தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை ஐந்து பெண்களுடன் அவர் இதுபோல அத்துமீறி உல்லாசத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது, கடந்த காலங்களில் இதுபோல இன்னும் பலருடன் அவர் நடந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மயக்கவியல் மருந்து படிப்பை அவர் நிறைவு செய்தார், அன்று முதல் அவர் இந்த மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றி வருகிறார். பெஜேரா சரியாக மயக்க மருந்து செலுத்துகிறாரா?
அவரது பணி எப்படி இருக்கிறது என்பதை கண்காணிக்க மருத்துவமனை நிர்வாகம் ஆபரேஷன் தியேட்டரில் ரகசிய கேமராவை பொருத்தி இருந்தது, இதை அறியாமல் அவர் அங்கு வரும் பெண்களிடம் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு 8 முதல் 15 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.