திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பெண்ணிடம் சில்மிஷம்… மதம்மாற சொல்லி வற்புறுத்தல்… அடுத்து நடந்தது என்ன?

Published : Jul 15, 2022, 04:53 PM IST
திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பெண்ணிடம் சில்மிஷம்… மதம்மாற சொல்லி வற்புறுத்தல்… அடுத்து நடந்தது என்ன?

சுருக்கம்

மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில், திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, மதம் மாற வற்புறுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில், திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, மதம் மாற வற்புறுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  மஹாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரின் ஜிங்கனப்பா லேன் பகுதியைச் சேர்ந்தவர் அராபத் லைக் கான்.  இவர் 27 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெண்ணை தனது மதத்திற்கு மாற வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இதுக்குறித்து பாதிக்கப்பட்ட பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அராபத் லைக் கானை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: பிரசவத்திற்கு வந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து டாக்டர் உடலுறவு.. 5 பேருடன் உல்லாசம் அனுபவித்தது அம்பலம்

மேலும் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏழு பேர் மீதும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுக்குறித்து காவல்துறை தரப்பினர் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருந்த அதே வணிக வளாகத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒரு கடை வைத்திருந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பழக்கவழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதாக அராபத் லைக் கான் வாக்குறுதி அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அவர்கள் உறவில் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் அந்த பெண்ணை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: மகளின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூர தாய்.. வித விதமாக டார்ச்சர் செய்து சைக்கோத்தனம்.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணை குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், தன்னை ஏமாற்றியது குறித்து கேட்க அராபத் லைக் கானின் வீட்டிற்குச் சென்றபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் என்னை கொலை செய்வதாக மிரட்டினர் என்று தெரிவித்தார். இதை அடுத்து காவல்துறையினர் அராபத் லைக் கானிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!