நீ உன் கணவனுக்கே உண்மையா இல்ல.. அப்புறம் எப்படி எனக்கு உண்மையா இருப்ப சொன்ன கள்ளக்காதலன் கொலை..!

Published : Aug 11, 2022, 10:10 AM ISTUpdated : Aug 11, 2022, 10:13 AM IST
நீ உன் கணவனுக்கே உண்மையா இல்ல.. அப்புறம் எப்படி எனக்கு உண்மையா இருப்ப சொன்ன கள்ளக்காதலன் கொலை..!

சுருக்கம்

திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு உடலை பெரிய பெரிய டிராலி சூட்கேசில் எடுத்து சென்ற கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு உடலை பெரிய பெரிய டிராலி சூட்கேசில் எடுத்து சென்ற கள்ளக்காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் திலா மோர் ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, பெண் ஒருவர் பெரிய டிராலி சூட்கேசை ஒன்றை இழுக்க முடியாமல் இழுத்து வந்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது,  முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். 

இதையும் படிங்க;- காரில் இருந்து வந்த முனகல் சத்தம்! கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் புதருக்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரம்

இதனையடுத்து, ஒரு கட்டத்தில் போலீசாரிடம் இருந்து அந்த பெண் தப்பிக்க முற்பட்டுள்ளார். பின்னர். அந்தத பெண்ணை போலீசார் மடக்கி பிடித்து  அந்த சூட்கேசை திறக்குமாறு கூறினார்.  அந்த சூட்கேசை திறந்த போது சூட்கேசில் ஒரு வாலிபரின் உடல் சடலமாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

 

அப்போது அந்த பெண் தனது பெயர் பிரீத்தி சார்மா என்றும், காஜியாபாத் துளசி நிகேதனில் வசிக்கும் தீபக் யாதவின் மனைவி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மூன்று வருடங்களாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், பிரோஸ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.  பின்னர்,  திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பிரீத்தி பிரோஸை தன்னை திருமண செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் பிரோசுக்கு விருப்பமில்லை. இதனால், ஆத்திரமடைந்த பிரோஸ் நீ உன் கணவருக்கு விசுவாசமாக இருக்கவில்லை, நீ எனக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும்" என்று கூறி உள்ளார். இதனால் கோபமடைந்த அந்த பெண், பிரித்து பிரோஸின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னார் உடலை மறைக்க பெரிய டிராலி சூட்கேசில் வைத்து மறைவான இடத்திற்கு கொண்டு சென்று போட நினைத்து ள்ளார். ஆனால் போலீசிடம் வசமாக சிக்கி கொண்டார்.

இதையும் படிங்க;- காதலிக்க மறுப்பு.. சிறுமி குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ.. அண்ணனுக்கு அனுப்பிய வக்கிர புத்தி இளைஞர்.!

PREV
click me!

Recommended Stories

Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்