வாலிபர் டார்ச்சர் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம், மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவர் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியராக இருக்கிறார். இவரது மகள் திவ்யா. இவர் மார்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ முடித்து விட்டு உயர்கல்வி படிப்பிற்காக காத்திருந்து வருகிறார். இந்நிலையில் சூழிகோணம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர் திவ்யாவை காதலித்து வந்துள்ளார்.
ரஞ்சித் மட்டுமல்லாமல், திவ்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காதலை தொடராமல் திவ்யா ரஞ்சித்தை பிரேக்கப் செய்துள்ளார். எதனையும் கண்டுகொள்ளாத ரஞ்சித், அடிக்கடி மீண்டும் செல்போன் மூலம் அழைத்தும் வந்துள்ளார். மேலும் திவ்யாவை பின்தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !
அதுமட்டுமின்றி திவ்யா ரஞ்சித்துடன் ஜோடியாக இருப்பது போல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், முகநூல் உட்பட சோசியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஞ்சித்தின் டார்ச்சர் தொடரவே இது சம்பந்தமாக குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இரண்டு தரப்பும் சமரசமாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் திவ்யாவை ரஞ்சித் பின்தொடவே ஆத்திரமடைந்த திவ்வியாவின் சகோதரன் ரோஷன் மேத்தியூ அவரது நண்பர்களுடன் ரஞ்சித்திடம் சென்று தட்டி கேட்கவே மேத்தியூ மற்றும் அவரது நண்பர்களை ரஞ்சித் மற்றும் அவரது மண்கடத்தல் நண்பர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ள நிலையில் மனமுடைந்து காணபட்ட திவ்யா நேற்று வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..நான் SOFT கிடையாது.. சர்வாதிகாரியாக மாறுவேன்.! அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!
இது குறித்து தகவலறிந்த மார்தாண்டம் போலீசார் உடலை கைபற்றி உடல் கூறு ஆய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக திவ்வியாவின் பெற்றோர்கள் மகள் மரணத்திற்கு காரணமான ரஞ்சித் உட்பட நண்பர்களை கைது செய்ய கேட்டு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“ஒரு வாசகம், திருவாசகம்..” ரஜினி ஸ்டைலில் பன்ச் அடித்த செல்லூர் ராஜு - ரசிகர்கள் குஷி !