உண்மை வெளி வரனும்.. முதல்வர் ஸ்டாலின்.. எடப்பாடியாரை சந்திக்க போறேன்: கள்ளக் குறிச்சி மாணவியின் தாய்.

By Ezhilarasan BabuFirst Published Aug 10, 2022, 7:20 PM IST
Highlights

தனது மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு. நேர்மையான முறையில் உண்மையை வெளியில் கொண்டுவர கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

தனது மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு. நேர்மையான முறையில் உண்மையை வெளியில் கொண்டுவர கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மாணவி மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ள நிலையில் அங்கு வந்திருந்த மாணவியின் தாயார் செல்வி இவ்வாறு கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூர் பள்ளி மாணவி மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும்  ஜூலை 29 ஆம் தேதி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். 

இதையும் படியுங்கள்:  மனைவி நடத்தையில் சந்தேகம்!ஃபாரினில் இருந்தபடியே வீடியோ காலில் தொல்லை! பத்தினி என்று நிரூபிக்க உயிரை விட்ட பெண்

சின்ன சேலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் நகலை கொண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டதால், அதை ஏற்க முடியாது என விழுப்புரம் மகளீர் நீதிமன்றம் மறுத்து விட்டது, வழக்கு சிபிசிஐடி வசம் உள்ளதால் சிபிசிஐடி பதிவு செய்த கிரைம் எண்ணை கொண்டே மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறி ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஜடி விசாரணை முழுமை பெறாததாலும், மாணவியின் மறு உடற்கூறு ஆய்வு அறிக்கையை  ஜிப்மர் மருத்துவமனை மருத்துவக்குழு வழங்கிய பிறகு, வழக்கு விசாரணை செய்யப்படும் எனக்கூறி ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை விழுப்புரம் மகளீர் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்: மகளின் காதலனை நள்ளிரவில் வரவழைத்த ஷகிலா.. இருவரும் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா?

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு ஜாமின் வழங்க கூடாது என மாணவியின் தாயார் மனுத் தாக்கல் செய்திருந்தார் இந்நிலையில் இன்று மீண்டும் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதி மன்றத்திற்கு வந்தது, அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சிபிசிஐடி போலீசார் வழக்கு  பதிவு செய்த கிரைம் எண்ணுடன் ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். அப்போது ஜிப்மர் மருத்துவமனை இரண்டாவது முறை செய்யும் உடற்கூறு ஆய்வு அறிக்கையை வைத்துத்தான் கிரைம் எண் வழங்கப்படுமென தெரிவித்ததால் விசாரணை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் தாயார் செல்வி மகள் மரணம் வரைக்கும் 30 நாட்கள் கடந்து விட்டது ஒரு தாயின் உணர்வுகளை இந்த உண்மையை வெளிக்கொண்டுவரும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்திக்க உள்ளதாக அப்போது அவர் கூறினார். மாணவியின் தாயாரின் இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 
 

click me!