550 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. தொழிலதிபரை மடக்கிய மாடல் அழகி பகீர்..

Published : Aug 10, 2022, 05:47 PM ISTUpdated : Aug 10, 2022, 05:49 PM IST
550 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. தொழிலதிபரை மடக்கிய மாடல் அழகி பகீர்..

சுருக்கம்

சென்னையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை சுருட்டிய மாடல் அழகி, அதை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சென்னையில் தொழிலதிபர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணத்தை சுருட்டிய மாடல் அழகி, அதை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சென்னை பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. பூந்தமல்லி பஸ்நிலையம் அருகே நிதி நிறுவனம் மற்றும் ஸ்வீட் ஸ்டால் நடத்தி வருகிறார். இவரது மகன்கள் சேகர் (41), ராஜேஷ் (37). இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ராஜேஷுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சேகருக்கு பாலியல் தொழில் நடத்தும் புரோக்கர் ஒருவர் மூலம், வேளச்சேரியை சேர்ந்த சுவாதி (20) அறிமுகமானார். இதனையடுத்து, அடிக்கடி ஸ்வாதியுடன் நெருக்கமாக இருந்த சேகர் பணத்தை அள்ளி வீசி வந்துள்ளார். அந்த வகையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 550 சவரன் நகைகள், 30 லட்சம் ரூபாய் பணம், 4 சொகுசு கார்கள், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டுகாட்டி இருசக்கர வாகனம் போன்றவற்றை வாங்கி ஆசை நாயகிக்கு  கொடுத்திருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க;- மகளின் காதலனை நள்ளிரவில் வரவழைத்த ஷகிலா.. இருவரும் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா?

இது குறித்து மாடல் அழகியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், மாடல் அழகி, 'எனக்கு ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளது. சேகர் கொடுத்த நகைகளை எல்லாம் விற்று ஸ்டார் ஓட்டலில் மது அருந்தினேன். சேகர் கொடுத்த 3 கார்களை ஆண் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டேன். அந்த டுகாட்டி பைக்கையும் இளம்காதலுனுக்கு கிஃப்ட்டாக கொடுத்துவிட்டேன். அப்போது தான் சேகர் வந்து சிக்கினார். என்னுடன் ஜாலியாக பொழுதை கழித்த மகிழ்ச்சியில் சேகர் எனக்கு கொடுத்த கட்டணம் மற்றும் பரிசை திருப்பிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை. சேகர் கொடுத்த பணம் நகை எல்லாம் செலவாகிப்போச்சு என்றார்.

உள்ளூரில் சுற்றியது மட்டுமின்றி கோவா, ஊட்டி போன்ற இடங்களுக்கும் சேகருடன் சுற்றுலா சென்று ஜாலியாக இருந்துள்ளார் சுவாதி. அதுமட்டுமின்றி தாய்லாந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் சேகர் செய்துவிட்ட நிலையில் இருவரும் போலீசில் சிக்கியது தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க;-  காதலிக்க மறுப்பு.. சிறுமி குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ.. அண்ணனுக்கு அனுப்பிய வக்கிர புத்தி இளைஞர்.!

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை