என்னை லவ் பண்ண மாட்டியா... இளம் பெண்ணை பூங்காவில் வைத்து.. சரமாரியாக குத்திய ஒரு தலை காதலன்.

Published : Aug 10, 2022, 07:42 PM ISTUpdated : Aug 10, 2022, 07:46 PM IST
என்னை லவ் பண்ண மாட்டியா... இளம் பெண்ணை பூங்காவில் வைத்து.. சரமாரியாக குத்திய ஒரு தலை காதலன்.

சுருக்கம்

தனது காதலை தொடர்ந்து புறக்கணித்து வந்த இளம்பெண்ணை பூங்காவுக்கு பேச அழைத்துச் சென்று இளைஞன் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தனது காதலை தொடர்ந்து புறக்கணித்து வந்த இளம்பெண்ணை பூங்காவுக்கு பேச அழைத்துச் சென்று இளைஞன் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதை கட்டுப்படுத்த  அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலிப்பதாக கூறி கற்பழித்து மோசடி செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, காதலித்து  திருமணம் செய்து கொண்டு பின்னர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடுமைகள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் நீண்ட நாட்களாக தனது காதலை புறக்கணித்து வந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்த இளைஞர் கத்தியால் குத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்: உண்மை வெளி வரனும்.. முதல்வர் ஸ்டாலின்.. எடப்பாடியாரை சந்திக்க போறேன்: கள்ளக் குறிச்சி மாணவியின் தாய்.

முழு விவரம் பின்வருமாறு:-  தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மையப் பகுதியை சேர்ந்தவர் ரோகித், இவர் அதே பகுதியைச் சேர்ந்த நவ்யா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 7 மாதங்களாக அந்த பெண்ணை  தொடர்ந்து பாலோப் செய்து காதலிப்பதாக கூறி வந்தார். ஒரு கட்டத்தில் காதல் என்ற பெயரில் அந்தப் பெண்ணை டார்ச்சர் செய்வது, எங்கு சென்றாலும் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து செல்வது, தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்துவது.  பொது இடங்களில் வைத்து சில முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடுவது என அந்த தொல்லை கொடுத்து வந்தார்.

இதையும் படியுங்கள்:  மனைவி நடத்தையில் சந்தேகம்!ஃபாரினில் இருந்தபடியே வீடியோ காலில் தொல்லை! பத்தினி என்று நிரூபிக்க உயிரை விட்ட பெண்

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முகரம் பண்டிகை என்பதால் சிறிது நேரம் பேச வேண்டுமென நவ்யாவை ரோகித், ராம் நகர் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். தன்னிடம் சிறிதுநேரம்  மனம் திறந்து பேசும்படி அந்தப் பூங்காவின் புதர் நிறைந்த பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றார், பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவ்யாவின் வயிறு, கால், கை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். அந்தப் பெண்  வலியால் அலறி துடித்தார், ஆனால் ரோஹித் அந்தப் பெண்ணை ரத்த வெள்ளத்திலேயே விட்டுவிட்டு தப்பினார். பின்னர் அவருடன் வந்திருந்த அவரின் தோழி  ஸ்ரேஷ்தா அந்த பெண்ணை பொதுமக்களின் உதவியுடன் சாய்ரக்ஷா மருத்துவமனையில் அனுமதித்தார்.

மருத்துவர்கள் அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினார், பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட ரோஹித்தை தேடி வருகின்றனர். அவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது, குத்து பட்ட நவ்யா பனகல் பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!