கோவாவில் காதலியுடன் உல்லாசம்.. சடலமாக கிடந்த காதலி.. கூகுள் பே மூலம் சிக்கிய காதலன் !

Published : May 18, 2022, 04:16 PM ISTUpdated : May 18, 2022, 04:17 PM IST
கோவாவில் காதலியுடன் உல்லாசம்.. சடலமாக கிடந்த காதலி.. கூகுள் பே மூலம் சிக்கிய காதலன் !

சுருக்கம்

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் கணேஷ் விர்னோத்கர். இவர் மே மாதம் 9ம் தேதி ஸ்ரேயா என்பவருடன் சேர்ந்து கோவாவிற்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். 

பின்னர், மே 13ம் தேதி அறையிலிருந்து வெளியே சென்ற கணேஷ் மீண்டும் விடுதிக்குத் திரும்பி வரவில்லை. மேலும் அவர் தங்கியிருந்த அறையின் கதவும் முன்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் பெண்ணன் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும்,  கணேஷ் விர்னோத்கர் குறித்த எந்த விவரங்களும் விடுதி ஊழியர்களிடம் இல்லாததால் அவரை கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு  சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து விடுதியில் அறைக்கு கூகுள்பே மூலம் கணேஷ் பணம் செலுத்தியது போலீசாருக்கு தெரியவந்தது.

பின்னர் போலீசார் அந்த கூகுள் பே எண்ணைக் கொண்டு விசாரணை செய்தபோது, கணேஷ் விர்னோத் மகாராஷ்டிராவில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் மகாராஷ்டிரா விரைந்து சென்று, அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து  கைது செய்து கோவா அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது பல்வேறு விஷயங்கள் வெளிவந்தது. இதில் மே 10ம் தேதி ஸ்ரேயாவிற்கு வயிற்று வலி ஏற்பட்டது.

பிறகு அடுத்த நாள் நான் அறையைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டேன். அவர் உயிரிழந்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இதனால், ஸ்ரேயா எப்படி இறந்தார் என்பது குறித்த மர்மம் தொடர்ந்து நீட்டித்து வருகிறது. இருப்பினும் அவரை உள்ளே வைத்து அறையை பூட்டிச் சென்றார் என்ற காரணத்தை கணேஷ் கூறாததால் அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : பாமக முக்கிய பிரமுகரை தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜக போட்ட ஸ்கெட்ச்.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே !

இதையும் படிங்க : ஷாக்கிங் நியூஸ்! சென்னை மெரினாவில் தோண்ட தோண்ட சாராய குவியல் - போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி