4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… கணவனுக்கு உடந்தையாக இருந்த மனைவி!!

Published : Nov 06, 2022, 09:49 PM IST
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… கணவனுக்கு உடந்தையாக இருந்த மனைவி!!

சுருக்கம்

திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்த கணவனுக்கு மனைவியும் உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் அருகே 4 வயது சிறுமியை பாலியன் வன்கொடுமை செய்த கணவனுக்கு மனைவியும் உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பல்லடம் அருகே திருவள்ளுவர் நகரில் வசித்து வருபவர் பிரகாஸ். கூலித்தொழிலாளியான இவருக்கு கவுரி என்ற மனைவியும் 4 வயது மகளும் உள்ளன. இவர்கள் வாடகை வீட்டில் இருக்கும் நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் மல்லிகாவின் வீட்டிற்கு அவரது உறவினர் கீர்த்திகா என்பவர் வந்துபோவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. மேலும் கீர்த்திகாவுக்கு குழந்தை இல்லாததால் கவுரியின் 4 வயது மகளுடன் பழகியுள்ளார். இந்த நிலையில் குழந்தையை தங்களுடன் ஊரான திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றுவிட்டு சில நாட்களுக்கு பிறகு திரும்ப கூட்டிவந்து விடுவதாக கீர்த்திகா கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: கேரளாவில் காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் திடீர் திருப்பம் - காதலி குடும்பத்தின் ‘அந்த’ செயல் !!

கவுரியும் தனது மகளை கீர்த்திகாவுடன் அனுப்பி வைத்தள்ளார் நிலையில் சில நாட்களிலேயே மகள் வழுக்கி விழுந்து காயமடைந்ததாக கூறி கீர்த்திகா கவுரியிடம் கூறியுள்ளார். இதை அடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த போது சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமியின் உடலில் தீக்காயங்கள் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் சிறுமிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை அறிந்து சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுக்குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில், சிறுமியை தன்னுடன் செங்குளத்துபட்டிக்கு அழைத்து சென்ற கீர்த்திகா, தனது கணவன் ராஜேஷ்குமாருடன் சேர்ந்து சிறுமியை கொடுமைசெய்துள்ளார். மேலும் உடல்களில் சூடு வைத்துள்ளார்.

இதையும் படிங்க: வேலை தேடும் பெண்கள் டார்கெட்.. சென்னையில் கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்.. ரைடில் சிக்கிய தம்பதி !!

மேலும் சிறுமியை கீழே தள்ளி தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தான் மருத்துவமனையில் அனுமதித்து உயிரிழந்தாக கூறினர். இதற்கிடையே சிறுமியின் உடற்கூறு ஆய்வில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் கீர்த்திகாவையும் அவரது கணவர் ராஜேஷ்குமாரையும் கைது தீவிர விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததையும், அதற்கு அவரது மனைவி கீர்த்திகா உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ்குமார், கீர்த்திகா ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!