அடிப்பாவி.. கள்ளக்காதலுக்காக காதல் கணவனை போட்டு தள்ள கூலிப்படையை ஏவிய கொடூர மனைவி.. வெளியான பகீர் தகவல்.!

By vinoth kumarFirst Published Dec 26, 2021, 12:40 PM IST
Highlights

சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் அக்பர் பாஷா(28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகவல்லி என்கிற யாஸ்மின் பானுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நாகவல்லிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதல் விவகாரத்தில் தாலி கட்டிய கணவரை கொலை செய்ய மனைவி கூலிப்படையை ஏவி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் அக்பர் பாஷா(28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகவல்லி என்கிற யாஸ்மின் பானுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நாகவல்லிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மனைவியின் கள்ளக்காதல் பற்றி தெரிய வந்ததும் அக்பர் பாஷா கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், கள்ளக்காதலனை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்துக்கட்ட யாஸ்மின் பானு முடிவு செய்தார். இது தொடர்பாக எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த தாரணி என்ற பெண்ணின் உதவியை நாடியுள்ளார். அவரிடம் கணவரை கொலை செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டார்.  இதையடுத்து தாரணி நான் அடியாட்களை ஏற்பாடு செய்து தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதன்படி அவர் கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

அப்போது கணவரை தீர்த்துக்கட்டினால் ரூ.1 லட்சம் பணம் தருவதாக யாஸ்மின் பானு கூறியுள்ளார். இதன்படி ரூ.60 ஆயிரம் பணத்தை  முன்பணமாக கொடுத்துள்ளார். வேலை முடிந்த பிறகு மீதி பணத்தை தருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கூலிப்படையை சேர்ந்த இருவரை அழைத்து அக்பர் பாஷாவை அடையாளம் காட்டியுள்ளனர். இவர்களின் திட்டப்படி முத்துசாமி பாலம் அருகே வைத்து அக்பர் பாஷாவை 2 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். அக்பர் கூச்சல் போட்டதால் தாக்குதலில் ஈடுபட்டவர் தப்பயோடி விட்டனர். 

ரத்த வெள்ளத்தில் சரிந்த அக்பர் பாஷா உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை முயற்சி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கணவனை கொலை செய்ய மனைவி கூலிப்படையை ஏவியது தெரியவந்தது. இதனையடுத்து, மனைவி மற்றும் கூலிப்படையை ஏவிய பெண் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அக்பர் பாஷாவை கொலை செய்ய கூலிப்படையாக செயல்பட்ட  அப்பு, சரவணன் என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!