சிறுவன் நரபலி..? கண்ணீருடன் செல்லும் அந்த இரண்டு நபர் யார்..? பகீர் கிளப்பும் அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகள்..

Published : Dec 25, 2021, 04:45 PM IST
சிறுவன் நரபலி..? கண்ணீருடன் செல்லும் அந்த இரண்டு நபர் யார்..? பகீர் கிளப்பும் அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகள்..

சுருக்கம்

விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் தள்ளுவண்டியில் மர்மமான முறையில் இறந்த கிடந்த வழக்கில் தற்போது புதிதாக மற்றொரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் சிறுவனை தள்ளுவண்டியில் மர்மநபர் இருவர் போட்டுவிட்டு கண்ணீருடன் செல்லவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.  

விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் தெரு என்ற இடத்தில் கடந்த 15ஆம் தேதி துணி சலவை செய்யும் தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் உடலில் எந்தவித காயமின்றி இறந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக அந்தச் சிறுவனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த காவல்துறையினர், குழந்தை படுகொலை செய்யப்பட்டு தள்ளுவண்டியில் வீசப்பட்டானா என்ற சந்தேகக் கோணத்தில் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மருத்துவமனை உடற்கூறாய்வு முடிவில், உயிரிழந்த சிறுவன் இரு தினங்களாக உணவு இல்லாமலும், தண்ணீர் இல்லாமலும் பசியில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி, கேட்போரின் நெஞ்சங்களை பட படக்கச் செய்தது. அதுவரையில் சிறுவனை யாரும் உரிமை கோராத நிலையில், சிறுவன் யார் என அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவந்தனர். அதேபோல, சிறுவனின் உயிரிழப்பு கொலையா அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்திலும் போலீஸார் தீவிரமாக விசாரித்துவந்தனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு,  அந்தச் சிறுவனை இரண்டு நபர்கள் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இரண்டு சிசிடிவி காட்சிகளில், இருவர் நடந்து செல்கின்றனர். அதில் ஒருவர் போர்வையால் மூடி சிறுவனைத் தோளில் சுமந்து வருவது போன்ற காட்சியும், உடன் வரும் மற்றொருவர் கையில் ஆயுதம் போன்ற ஒன்றை எடுத்துச் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.  

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கிடைக்கபெற்ற இந்த சிசிடிவி காட்சிகளில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே வந்து 5 வயது குழந்தையின் சடலத்தை இருவரும் தள்ளுவண்டியில் போட்டு சென்றிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கின்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அச்சிறுவன் இல்லாமல் அந்த மர்மநபர்கள் மட்டும் பேருந்து நிலையம் வரும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு நபர்கள் யார் என அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் காவல்துறையினர், இருவரும் விரைவில் பிடிபடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் விழுப்புரம் விரட்டிகுப்பம் பாதையில் உள்ள காளி கோயில் என்ற பகுதியிலிருந்து இரண்டு நபர்கள் சிறுவனை தோளில் தூக்கி வரும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். காளி கோயில் பகுதியில் இருந்து தூக்கி வருவதால், சிறுவனை நரபலி கொடுத்தார்களா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது போலீசாரால் வெளியிடப்பட்ட நான்காவது சிசிடிவி பதிவில் குழந்தையை தள்ளுவண்டியில் போட்டு விட்டு இருவரும் தனியாக நடந்து வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஏற்கனவே இறந்த குழந்தையை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது குழந்தையின் சடலத்தை போட்டுவிட்டு கண்ணீருடன் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இவர்கள் யார் என்பது குறித்து விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணை மேற்கொண்ட நிலையில் இவர்கள் அண்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக கூட இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!