ஆசை ஆசையாய் காதலித்து திருமணம்.. பல பெண்களுடன் தொடர்பு.. மனைவியை விபச்சாரத்தில் தள்ள முயன்ற கொடூர கணவர்..!

Published : Dec 24, 2021, 01:46 PM IST
ஆசை ஆசையாய் காதலித்து திருமணம்.. பல பெண்களுடன் தொடர்பு.. மனைவியை விபச்சாரத்தில் தள்ள முயன்ற கொடூர கணவர்..!

சுருக்கம்

தனது கணவர் நடவடிக்கையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. கணவர் இல்லாத நேரத்தில் அவரது செல்போனை எடுத்து பார்த்த போது இன்ஸ்டாகிராம் மூலமாக அருண் ஜோஷிக்கு பல பெண்களுடன் பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், அவர்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்த சம்பவம் மனைவியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் தாலுகா, சந்தப்பேட்டையை சேர்ந்தவர் சொர்ண பிரியா (23). தஞ்சாவூர் மாவட்டம், காந்திபுரம், அமிர்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் ஜோஷி (30). கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து, இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டார் பெற்றோருக்கு தெரியவந்தது. முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் இறுதியில் ஒருவழியாக சம்மதம் தெரிவித்ததையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

இதையடுத்து, சென்னை நீலாங்கரை, செங்கேணி அம்மன் கோயில் பகுதியில் உள்ள அருண் ஜோஷி வீட்டில் இவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தனது கணவர் நடவடிக்கையில் மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. கணவர் இல்லாத நேரத்தில் அவரது செல்போனை எடுத்து பார்த்த போது இன்ஸ்டாகிராம் மூலமாக அருண் ஜோஷிக்கு பல பெண்களுடன் பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், அவர்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவரிடம் கேட்ட போது சரியான பதில் சொல்லாமல் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், இவர் ‘கால் பாய்’ என்கிற வகையில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில், தனது பெற்றோருடன் சேர்ந்து, சொர்ண பிரியாவையும் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி, அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரின் சுயரூபம் தெரிந்ததால் சொர்ண பிரியா மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.  

இதனையடுத்து, சொர்ண பிரியா இதுகுறித்து, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 21ம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அருண் ஜோஷை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கால் பாயாக செயல்பட்டதும், காதல் மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை செய்த மகளிர் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!