டியூசன் சென்ற இடத்தில் ரூமுக்கு அழைத்து சென்று சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்.. வலி தாங்க முடியாமல் கதறல்.!

Published : Dec 24, 2021, 08:33 AM IST
டியூசன் சென்ற இடத்தில் ரூமுக்கு அழைத்து சென்று சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்.. வலி தாங்க முடியாமல் கதறல்.!

சுருக்கம்

வீட்டில் அசோக் மட்டும் தனியாக இருந்தார். அப்போது டியூசன் படிப்பதற்காக 4 மாணவிகள் வந்தனர். அவர்களை பார்த்த அசோக் நான் உங்களுக்கு டியூசன் எடுக்கிறேன் என்று கூறினார். அப்போது ஒரு மாணவியை மாடி பகுதியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். 

கோட்டகுப்பம் அருகே டியூசன் சென்டர் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது  செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கு சோதனைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மகன் அசோக் என்கிற மணிமாறன். இவரும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது தங்கை அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு வீட்டில் வைத்து டியூசன் எடுத்து வருகிறார். 

ரகுபதி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும் போது காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவருக்கு துணையாக அசோக்கின் தங்கை, தாய் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் வீட்டில் அசோக் மட்டும் தனியாக இருந்தார். அப்போது டியூசன் படிப்பதற்காக 4 மாணவிகள் வந்தனர். அவர்களை பார்த்த அசோக் நான் உங்களுக்கு டியூசன் எடுக்கிறேன் என்று கூறினார். அப்போது ஒரு மாணவியை மாடி பகுதியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். 

வலி தாங்க முடியாமல் துடித்த சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை கண்ட அவரது தாய், இதுகுறித்து மாணவியிடம் கேட்டுள்ளார். அப்போது, குழந்தை நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தாய் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மீனவர் அசோக் என்கிற மணிமாறனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுதிள்ளது.

PREV
click me!

Recommended Stories

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!
Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?