குழந்தையை கொஞ்சுவது போல் அம்மாவை கரெக்ட் செய்து உல்லாசம்.. பக்கத்து வீட்டுக்காரனுக்காக பெண் செய்த பகீர் செயல்

By vinoth kumar  |  First Published Dec 26, 2021, 10:12 AM IST

பிரியாவும், இன்னொரு வாலிபரும் தண்ணீர் டிரம்பை வெளியே தூக்கிக் கொண்டு வந்தனர். அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் பக்கத்து வீடுகளில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவர் துர்நாற்றம் தாங்க முடியாமல் வெளியே வந்து விசாரித்தனர். அப்போது பிரியாவும் அந்த வாலிபரும் முன்னுக்குபின் முரணாக பதில்அளித்து சமாளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கிச்சிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 


கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு கணவரை கொலை செய்த மனைவி தண்ணீர் டிரம்பில் உடலை அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை மனைவி மற்றும் கள்ளக்காதலன் அதிரடியாகை கது செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி காலனியை சேர்ந்தவர் சேதுபதி (33). இவரது மனைவி பிரியா (30). 7 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த பிரியாவுக்கு கடந்த 10 மாதத்திற்கு முன் 2வது பெண் குழந்தை பிறந்தது. சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு குடித்துவிட்டு வருவாராம். இதனால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டிலிருந்து பிரியாவும், இன்னொரு வாலிபரும் தண்ணீர் டிரம்பை வெளியே தூக்கிக் கொண்டு வந்தனர். அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் பக்கத்து வீடுகளில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவர் துர்நாற்றம் தாங்க முடியாமல் வெளியே வந்து விசாரித்தனர். அப்போது பிரியாவும் அந்த வாலிபரும் முன்னுக்குபின் முரணாக பதில்அளித்து சமாளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கிச்சிப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தண்ணீர் டிரம்புக்குள் கணவர் உடல் இருப்பதாக பிரியா தெரிவித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பிரியா மற்றும் அந்த வாலிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். 

டிரம்மிற்குள் சேதுபதியின் உடல் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசியதால், போலீசார் பிரேத பரிசோதனைக்காக டிரம்மோடு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரியாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). பிரியாவின் குழந்தைகளை பார்க்க சதீஷ்குமார் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

கணவர் சேதுபதி இல்லாத நேரத்தில் வீட்டில் இருவரும் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் பிரியாவிடம் சதீஷ்குமார் திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே சேதுபதி தினமும் குடித்துவிட்டு வந்து பிரியாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடித்து உதைத்து வந்துள்ளார். கடந்த 16ம் தேதி பிரியாவின் தந்தை காலமானார். அவரது இறுதிச்சடங்கிற்கு சென்றுவிட்டு 17ம் தேதி இருவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது சேதுபதி குடிபோதையில் பிரியாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது சதீஷ்குமார் வந்து தட்டிக்கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்ட நிலையில், இருவரும் சேர்ந்து சேதுபதியை கட்டை மற்றும் கல்லால் சரமாரி தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் இருவரும் சேதுபதியின் உடலை தண்ணீர் டிரம்பில் அடைத்து வீட்டில் வைத்துள்ளனர். வெளியே தெரியாமல் இருக்க தலையணை, போர்வையை டிரம்பில் வைத்து மூடி உள்ளனர்.

ஒருவாரமான நிலையில் உடல் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் யாருக்கும் தெரியாமல் உடலை வெளியே கொண்டு சென்று வீச முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் இருந்த டிரம்பை வெளியே கொண்டு வந்தனர். அப்போது துர்நாற்றம் கடுமையாக வீசியதால் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சிக்கிக்கொண்டனர். விசாரணைக்கு பின் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியா மற்றும் அவரின் கள்ளக்காதலன் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

click me!