அதுக்கு வர மறுத்ததால் கணவன் செய்த வெறிச் செயல் !! திருமணம்ஆன 9 மாதத்தில் நடந்த கொடூரம்!!

Published : Oct 08, 2018, 09:22 AM IST
அதுக்கு வர மறுத்ததால் கணவன் செய்த  வெறிச் செயல் !! திருமணம்ஆன 9 மாதத்தில் நடந்த கொடூரம்!!

சுருக்கம்

திருச்சி அருகே  உடலுறவு கொள்ள மனைவி மறுத்தால், திருமணம் ஆகி ஒன்பதே மாதம் ஆன மனைவியின் தலையை தனியாக துண்டித்து கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.  

திருச்சி காட்டூர்  பிலோமினாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர் சகாயராஜ்.  எல்.ஐ.சி. முகவர். இவருக்கும் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கீழதிருப்பந்துருத்தியை சேர்ந்த பெஞ்சமின் மகள் ஜெசிந்தா ஜோஸ்பின் என்பருக்கும்  கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் ஜெசிந்தாவின் நகையை  சங்கர் சகாயராஜ் அவருக்குத் தெரியாமல் எடுத்துச்சென்று அடகு வைத்து விட்டார். இது தெரியவந்ததும் ஜெசிந்தா ஜோஸ்பின் கணவரிடம் தகராறில் ஈடுபட்டார்.

இந்நிலையில் கடந்த ஆடி மாதம் தாய் வீட்டுக்கு சென்ற ஜெசிந்தா ஜோஸ்பின், அதன்பிறகு கணவர் வீட்டுக்கு வரவில்லை. சங்கர் சகாயராஜ் பலமுறை மாமனார் வீட்டுக்கு சென்று, குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும், ஜெசிந்தா ஜோஸ்பின் வர மறுத்து விட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த வாரம் சங்கர் சகாயராஜின் பெற்றோர், ஜெசிந்தா ஜோஸ்பின் வீட்டுக்கு சென்று அவர்களிடம் சமாதானம் பேசியதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஜெசிந்தா ஜோஸ்பின் கணவருடன் வாழ சம்மதித்தார். இதையடுத்து மருமகளை தங்களது வீட்டுக்கு அவர்கள் அழைத்து வந்தனர்.

அன்று இரவு சகாயராஜ் தனது மனைவியை உறவு வைத்துக் கொள்ள அழைத்துள்ளார். ஆனால் ஜோஸ்பின் அதற்கு மறுத்தால், ஆத்திரமடைந்த கணவர் சங்கர் சகாயராஜ் அங்கிருந்த அரிவாளை எடுத்து ஜெசிந்தாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.

ஜோஸ்பினின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது  ரத்தக் கறை படிந்த அரிவாளுடன் சகாயராஜ் நின்றிருந்தார், அருகில் ஜோஸ்பின் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதையடுத்து  சங்கர் சகாயராஜ் வீட்டில் இருந்து வெளியேறி கிராம நிர்வாக அதிகாரி சிவலிங்கம் முன்னிலையில் சரணடைந்தார். அவர் திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீவார் சகாய ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். செக்ஸ் வைத்துக் கொள்ள மறுத்த மனைவியின் கழுத்தை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..