பல ஆண்களுடன் கள்ளக் காதல்…. பெற்ற தாயைப் போட்டுத் தள்ளிய மாணவன் !!

Published : Oct 05, 2018, 09:42 AM IST
பல ஆண்களுடன் கள்ளக் காதல்…. பெற்ற தாயைப் போட்டுத் தள்ளிய மாணவன் !!

சுருக்கம்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பில் இருந்து ஊர்சுற்றி வந்ததாக கூறி பெற்ற தாயை கல்லூரி மாணவன் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த ராணி என்ற பெண் தையல்வேலை செய்து வந்தார். இவருடைய கணவர், கருத்துவேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

இதனால் தனது 2 மகன்களுடன் அந்த பெண் வசித்து வந்தார். இதில் மூத்த மகன் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 17 வயதான ராஜசேகர் என்ற இளைய மகன் திருப்பூரில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். 



இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு அந்த பெண்ணின் மூத்த மகன் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில்  ராணியும், ராஜசேகரும் வீட்டில் இருந்துள்ளனர். மாலை மூத்த மகன் வந்தபோது  வீட்டின் கதவு பூட்டப்படாமல் திறந்து இருந்தது.



இதையடுத்து கதவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் மூத்தமகன் சென்றபோது வீட்டினுள் ராணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  ராணி  அருகே கயிறு ஒன்றும் கிடந்தது. அதே நேரத்தில் வீட்டில் இருந்த  ராஜசேகரை காணாததால் அவருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்க முயன்றார்.

ஆனால்  அவருடைய செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் ராணி  இறந்துவிட்ட தகவல் பரவியதால், பயந்துபோன ராஜசேகர் அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் , தான் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிப்பதாகவும், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் வேண்டும் என்றும் தனது தாயிடம் ரோஜசேகர் கேட்டிருக்கிறார்.

ஆனால் அந்த மாணவிக்கு வயது அதிகம் இருப்பதால் வயது வித்தியாசம் உள்ளது. எனவே திருமணம் செய்ய எதிர்ப்பு  ராணிதெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், தனது தாயாரை பார்த்து  நீ என்ன யோக்கியமா, கண்ட கண்ட ஆண்கள் கூட சுற்றித்திரிகிறாயே என கோபமாக கூறியபடி சற்றும் எதிர்பாராத வகையில் அருகில் கிடந்த கயிற்றால் ராணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

இது குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தாயின் கள்ளக்காதல்  காரணமாக அவரை பெற்ற மகனே கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..