தந்தையை ரவுடிகளை வைத்து கொன்ற மகள்!! தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் வெறிச்செயல்...

Published : Oct 04, 2018, 05:34 PM IST
தந்தையை ரவுடிகளை வைத்து கொன்ற மகள்!! தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் வெறிச்செயல்...

சுருக்கம்

கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேலம், வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். 

சசிகலாவுக்கு திருமணமான நிலையில், வீராணம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரோடு உறவு வைத்திருந்தார்.சசிகலா, மருத்துவமனை செல்லும்போதும், பணி முடிந்து திரும்பும்போதும் அவரை பைக்கில் ஏற்றி செல்வார் ராஜா. 

மகளின் இந்த கள்ளத்தொடர்பு குறித்து தெரிந்து கொண்ட அவரது அப்பா தொப்பக்கவுண்டர், சசிகலாவை கண்டித்துள்ளார். ஆனால், தந்தையின் பேச்சை சசிகலா கேட்காமல், ராஜாவுடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், சசிகலாவின் தந்தை தொப்பக்கவுண்டர், சசிகலாவை மிரட்டியுள்ளார். 

இதில் கோபமடைந்த சசிகலாவும், அவரது கள்ளக்காதலனும், தொப்பக்கவுண்டரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு வீராணத்தில் உள்ள ஸ்டீபன் ராஜா, மணிகண்டன் ஆகிய ரவுடிகளின் துணையோடு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தொப்பக்கவுண்டரை சரமாரியாக வெட்டி கெலை செய்தனர்.

தொப்பக்கவுண்டர் கொலை செய்யப்பட்டது குறித்து வீராணம், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தவழக்கு சேலம் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் நடந்த இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பில், சசிகலா, ராஜா, ஸ்டீபன், ராஜா, மணிகண்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிமன்றம் விதித்தது.

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..