தாயையும், மகளையும் 18 பேர் சேர்ந்து கற்பழித்த கொடூரம்… இதில் 7 பேர் போலீஸ் அதிகாரிகள் !!

Published : Oct 04, 2018, 10:59 PM IST
தாயையும், மகளையும் 18 பேர் சேர்ந்து கற்பழித்த கொடூரம்… இதில் 7 பேர் போலீஸ் அதிகாரிகள் !!

சுருக்கம்

அரியானா மாநிலத்தில்  தாய் மற்றும் அவரது 16 வயது மகளை 7 போலீஸ் அதிகாரிகள் உட்பட  18 பேர் கூட்டாக சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 18 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

அரியானா மாநிலம், கைதால் மாவட்டத்தில் உள்ள சர்பஞ் எனும் கிராமத்தை சேர்ந்தவர் லீலா. அவரது கணவர் உடல்நலம் சரியில்லாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மரணடைந்தார். இவர்களுக்கு  16 வயதில் பத்மினி என்ற மகள் உள்ளார். இவர்கள் இருவரும் அங்கு கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக  அருகில் இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கு தாய், மகள் இருவரையும் போலீசார் அழைத்துக் சென்றுள்ளனர்.

இதையடுத்து விசாரணை என்ற பெயரில் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அடிக்கடி வரவழைத்த போலீசார், துணை காவல் ஆய்வாளர் ஒருவருடன் சேர்ந்து தலைமை காவலர் மற்றும் காவலர் அந்தஸ்தில் உள்ள 7 போலீஸ் அதிகாரிகள், தாயை கற்பழித்துள்ளனர்.

 மேலும், அவரது  16 வயது மகளையும் சீரழித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மேலும் 11 பேர்  இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அந்த சிறுமி தங்கள் இருவருக்கும் நடந்த கொடுமைகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த 18 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
 


அண்மையில்தான்  அரியானா மாநிலத்தில், சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தாயையும் மகளையும் போலீஸ் அதிகாரிகளே கற்பழித்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத

PREV
click me!

Recommended Stories

பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!