சரக்கு அடிக்க பணம் தராத மனைவி.. போதையில் துடிதுடிக்க கொன்ற கணவருக்கு சரியான ஆப்பு வைத்த நீதிமன்றம்.!

Published : Aug 26, 2022, 01:23 PM ISTUpdated : Aug 26, 2022, 01:25 PM IST
சரக்கு அடிக்க பணம் தராத மனைவி.. போதையில் துடிதுடிக்க கொன்ற கணவருக்கு சரியான ஆப்பு வைத்த நீதிமன்றம்.!

சுருக்கம்

குடிக்க பணம்தர மறுத்த மனைவியை எரித்துகொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

குடிக்க பணம் தர மறுத்த மனைவியை எரித்துகொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழவளவு பகுதியை சேர்ந்தவர் முருகன் என்ற சுப்பையா (30). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே முருகன் என்ற சுப்பையா குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் நாள்தோறும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதையும் படிங்க;- கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி காரில் கடத்தி கொடூர கொலை.. நெஞ்சு, பின்னந்தலையில் சரமாரி வெட்டு.!

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் சுப்பையா அடித்து உதைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவி செல்வி பணம் தர மறுத்ததால் மதுபோதையில் இருந்த முருகன் தனது மனைவி செல்வி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார். இதில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கீழவளவு காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து கணவன் சுப்பையா கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கானது மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவு பெற்ற நிலையில் மகளிர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தீர்ப்பு வழங்கினார். அதில், மனைவி செல்வியை எரித்து கொலை செய்த கணவன் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க;-  உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரை மிளகாய் பொடி தூவி போட்டு தள்ளிய காமக்கொடூர மனைவி..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு
அதிமுக நகர இளைஞரணி இணைச் செயலாளரை தட்டித்தூக்கிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி காரணம்!