7 மாத கர்ப்பிணி மனைவி கரண்டியால் அடித்து கொன்றது இதற்காக தான்.. காதல் கணவர் கூறிய பகீர் வாக்குமூலம்..!

Published : Aug 26, 2022, 08:01 AM ISTUpdated : Aug 26, 2022, 08:03 AM IST
7 மாத கர்ப்பிணி மனைவி கரண்டியால் அடித்து கொன்றது இதற்காக தான்.. காதல் கணவர் கூறிய பகீர் வாக்குமூலம்..!

சுருக்கம்

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அற்புதராஜ் (20) காய்கறி மார்க்கெட் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்த சக்தி(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதால், சக்தி கர்ப்பமடைந்தார்.

விருத்தாசலம் அருகே 7 மாத கர்ப்பிணி மனைவியை கரண்டியால் அடித்துக் கொலை செய்த காதல் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அற்புதராஜ் (20) காய்கறி மார்க்கெட் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்த சக்தி(18) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதால், சக்தி கர்ப்பமடைந்தார். இதையடுத்து, இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டு சக்தி வீட்டில் வசித்தனர். 

இதையும் படிங்க;- பெற்ற மகனை கடப்பாரையால் கண்ணில் குத்தி துடிதுடிக்க கொன்ற தந்தை.. என்ன காரணம் தெரியுமா?

தற்போது சக்தி 7 மாத கர்ப்பமாக உள்ளார். தனக்கு வளைகாப்பு நடத்துமாறு அற்புதராஜிடம், சக்தி கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே, கடன் சுமை அதிமாக உள்ளதாக கூறி அற்புதராஜ் மறுத்து வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கூலி வேலைக்கு சென்ற சக்தியின் தாய் லதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது முகம், கழுத்து ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் சக்தி சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்தியில் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது காதல் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அற்புதராஜ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- சக்தி வளைகாப்பு நடத்த வேண்டும் கூறி வந்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், எங்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. நேற்று எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான், வீட்டில் இருந்த கரண்டியால் அவரை தாக்கினேன். இதில், சக்தி மயங்கி விழுந்தார். ஆத்திரத்தில் அவரது கழுத்து முகத்தில் கையால் குத்தி தாக்கிவிட்டு கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். காதல் மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல், கொடூரமாக அடித்துக் கொலை செய்த காதல் கணவரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரை மிளகாய் பொடி தூவி போட்டு தள்ளிய காமக்கொடூர மனைவி..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!