பெற்ற மகனை கடப்பாரையால் கண்ணில் குத்தி துடிதுடிக்க கொன்ற தந்தை.. என்ன காரணம் தெரியுமா?

Published : Aug 25, 2022, 01:14 PM ISTUpdated : Aug 25, 2022, 01:17 PM IST
பெற்ற மகனை கடப்பாரையால் கண்ணில் குத்தி துடிதுடிக்க கொன்ற தந்தை.. என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

சின்னசேலம்  அருகே மகனை கடப்பாரையால் தந்தையே குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

சின்னசேலம்  அருகே மகனை கடப்பாரையால் தந்தையே குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எலியத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மயில்(50). இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சந்திரா கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சந்ததிராவுக்கு பிறந்த மகன் சசிகுமார்(27). இவருக்கு திருமணம் ஆகவில்லை. சசிகுமார் அவ்வப்போது சுப, துக்க நிகழ்ச்சிகளில் தாரை தப்பட்டை மேளம் அடித்து வந்துள்ளார். 

முதல் மனைவி சந்திரா இறந்துவிட்டதால் வசந்தா என்பவரை மயில் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா(23), தீபிகா(15) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் திருமணம் ஆன திவ்யாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் கேரளாவில் இருந்த மயில் மகளை பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர் வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மயிலுக்கும் அவரது மகள் தீபிகாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட சசிகுமார் தங்கையிடம்  ஏன் குடித்துவிட்டு தகராறு செய்கிறாய் என கேட்டுள்ளார். இதில், வாய்த்தகராறு முற்றியதில் மகன் சசிகுமார் தந்தையின் முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், மயில் கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, மயிலை அவரது மகள் தீபிகா பாட்டி வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். மகன் அடித்துவிட்டதால் ஆத்திரத்தில் இருந்த தந்தை மயில் கடப்பாரையால் மகன் சசிக்குமாரின் கண்ணில் குத்தியதாக தெரிகிறது. இதில், படுகாயமடைந்த சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலை கைது செய்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!