மாநகராட்சி ஆணையர் பெயரில் பணம் கேட்டு மெசேஜ்..! அலறி துடித்து பணம் கொடுத்த அதிகாரிகள்.. அடுத்து நடந்த டிவிஸ்ட்

By Ajmal KhanFirst Published Aug 25, 2022, 12:16 PM IST
Highlights

மதுரை மாநகராட்சி ஆணையாளர் பெயரில் வாட்ஸ் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

பணம் கேட்டு உதவி ஆய்வாளர்களுக்கு மெசேஜ்

நவீன தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப நாளுக்கு நாள் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. முகநூல் மூலமாக நண்பர்களின் பெயரில் நட்பு அழைப்பு விடுத்து பணம் கேட்பது, ஆபாச படங்களை காட்டி மிரட்டி பணம் வசூலிப்பது என நாள்தோறும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. சாதாரண மக்களை மட்டுமே குறி வைத்து நடத்தப்படும் மோசடிகள் தற்போது அதிகாரத்தில் உள்ளவர்களின் பெயர்களையும் பயன்படுத்தி மோசடி நடைபெறுகிறது. அந்தவகையில் ஏற்கனவே தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பிய மர்ம நபர், தற்போது மதுரை மாநகராட்சி ஆணையர் பெயரில் பணம் கேட்டு உயர் அதிகாரிகளுக்கு மெசேஜ் அனுப்பிய புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி ஆணையாளராக சிம்ரன்ஜித் சிங் காலோன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பதவியேற்று  பணிபுரிந்துவருகிறார். நாள்தோறும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து நேரடி ஆய்வு செய்வதோடு, பணி விவரங்கள் குறித்தும் மாநகராட்சி மண்டல, இணை மற்றும் துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகிறார்.

Latest Videos

நகை கடையில் நூதன முறையில் திருட்டு… சிசிடிவியில் சிக்கிய திமுக வார்டு செயலாளர்!!

பணம் கொடுத்து ஏமாந்த அதிகாரிகள்

இந்த நிலையில் ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் பெயரில் போலியான வாட்ஸ்அப் எண் கணக்கு தொடங்கி அதன் மூலமாக மர்ம நபர் ஒருவர் மதுரை பகுதியில் உள்ள மாநகராட்சி உதவி ஆணையாளர்களுக்கு  மெசேஜ் அனுப்பி அதன் மூலமாக பணம் வேண்டும் என அனுப்பியுள்ளனர், இதனை நம்பிய சிலர் பணத்தை அனுப்பி ஏமாற்றமடைந்துள்ளனர், சிலர் நேரடியாக ஆணையாளரை தொடர்புகொண்டு பணம் குறித்து சில அதிகாரிகள் கேட்டுள்ளனர், அப்போது அதிகாரிகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் சார்பில் மோசடி தொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, முதற்கட்ட விசாரணையில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடி செய்த எண்ணை தொடர்புகொண்டபோது பெண் ஒருவர் பேசியதும், மோசடியாக பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் இது போன்ற மோசடி நடைபெற்றதும் தெரியவந்துள்ளது, இதனையடுத்து மோசடி நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படியுங்கள்

உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரை மிளகாய் பொடி தூவி போட்டு தள்ளிய காமக்கொடூர மனைவி..!

 

click me!