உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரை மிளகாய் பொடி தூவி போட்டு தள்ளிய காமக்கொடூர மனைவி..!

Published : Aug 25, 2022, 10:56 AM ISTUpdated : Aug 25, 2022, 10:57 AM IST
 உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரை மிளகாய் பொடி தூவி போட்டு தள்ளிய காமக்கொடூர மனைவி..!

சுருக்கம்

ஒசூர் அருகே கள்ளக்காதலுக்கு உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஒசூர் அருகே கள்ளக்காதலுக்கு உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே பெரிய ஆவேரிப்பள்ளி கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தின் பின்புறம் முகம் மற்றும் உடலில் மிளகாய் பொடி தூவிய நிலையில்  ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அதே அபகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சின்னப்பா(50) என்பது தெரியவந்தது. அவரது முகம் மற்றும் நெஞ்சு பகுதியில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. 

இதையும் படிங்க;- கள்ளக்காதல் உறவால் பிறந்த குழந்தை.. சுவற்றில் மோதி.. கழுத்தை இறுக்கி கொன்று புதைப்பு.. தாய், பாட்டி கைது.!

இதுகுறித்து சின்னப்பாவின் மனைவி பாஸ்தா மேரியிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததை மனைவி ஒப்புக்கொண்டார். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில்;- சின்னப்பாவின் மனைவி பாஸ்தா மேரி (35) கட்டிட சித்தாளாக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த துரைசாமிக்கும்(55) கள்ளக்காதல் இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவி மற்றும் துரைசாமியை கண்டித்துள்ளார்.  இதனால் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருக்கும் சின்னப்பாவை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சின்னப்பாவை கிராம ஊராட்சி சேவை மையம் முன்பு வழிமறித்த துரைசாமி மற்றும் பாஸ்தா மேரி ஆகிய இருவரும், அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தின் பின்புறம் போட்டுவிட்டு சென்றதாக போலீசார் கூறினர்.  இதையடுத்து பாஸ்தாமேரி மற்றும் துரைசாமியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;-  அவன் படிப்புதான் 8ம் வகுப்பு! பண்ற வேலையெல்லாம் வேற லெவல்! பள்ளி மாணவனுடன் எஸ்கேப்பான ஆன்ட்டி பகீர்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி