விருதுநகர் பெண் கூட்டு பாலியல் கொடுமை.. உடந்தையாக இருந்த சிறுவன் - அதிர்ச்சி சம்பவம்

By Raghupati R  |  First Published Aug 24, 2022, 7:02 PM IST

விருதுநகர், அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி பாலியல் கொடுமை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த 22 ஆம் தேதி விருதுநகர் சென்றார். இதையடுத்து மீண்டும் அருப்புக்கோட்டை செல்வதற்காக விருதுநகரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.அந்த வழியாக காரில் அந்த பெண்ணுக்கு தெரிந்த ஒரு நபர் வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

மேலும் செய்திகளுக்கு..குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது

உடனே அவர் தானும் ஊருக்குதான் செல்கிறேன், உன்னை அந்த வழியில் இறக்கிவிடுகிறேன், என கூறி அந்த பெண்ணை காரில் ஏற்றியுள்ளார். கோபாலபுரம் சாலையில் அந்த கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு ஒரு இடத்தில் கார் நிறுத்தப்பட்டு அந்த பெண்ணும் அவரை அழைத்து வந்தவரும் பேசிக் கொண்டிருந்தனர்.  அந்த நேரம் பார்த்து 7 பேர் பைக் மற்றும் வேறு ஒரு காரில் அவ்வழியாக வந்துள்ளனர். அவர்களின் பின்னால் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 7 பேர், முத்துச்செல்வத்தை சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளினர்.

பின்னர் முத்துச்செல்வத்துடன் வந்த பெண்ணை தங்களின் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.பின்னர் அப்பெண் அணிந்திருந்த 5 பவுன் நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இந்தசம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில், விருதுநகர் எஸ்பி மனோகரன் மேற்பார்வையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் செய்திகளுக்கு..2 குழந்தைகளை அடித்தே கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட தாய்.. குடும்ப தகராறில் விபரீதம்

அதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை நகர் போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட மேலும் 4 பேரை கைது செய்த செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு : முடியவே முடியாது.. எச்சரித்த நீதிமன்றம் - மீண்டும் பரபரப்பு

click me!