அதிர்ச்சி!! வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. ஆத்திரமடைந்த மனைவி..மண்ணெண்ணெய் ஊற்றி கணவனுக்கு தீ வைப்பு..

Published : Jul 11, 2022, 05:29 PM ISTUpdated : Jul 11, 2022, 05:30 PM IST
அதிர்ச்சி!! வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. ஆத்திரமடைந்த மனைவி..மண்ணெண்ணெய் ஊற்றி கணவனுக்கு தீ வைப்பு..

சுருக்கம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேறொரு பெண்ணுடன் கணவன் கள்ளத்தொடர்பில் இருந்ததால், ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் லிங்கநாதன். இவருக்கு  அங்கயற்கண்ணி எனும் மனைவியும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று சொல்லபடுகிறது. 

மேலும் படிக்க:மகன் பிறந்தநாள் அதுவுமா பார்க்க விடாத தாய்.. காதல் மனைவியை ஓட ஓட விரட்டி கண்டம் துண்டமாக வெட்டி வீசிய கணவர்

இதற்கிடையில் நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையே மீண்டும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரவில் கணவர் லிங்கநாதன் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அவர் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார் அவரது மனைவி அங்கயற்கண்ணி. தொடர்ந்து அலறி துடித்த லிங்கநாதன் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். 

மேலும் படிக்க:அதிர்ச்சி!! இறந்த 2 வயது தம்பி உடலுடன் அமர்ந்திருந்த சிறுவன்.. நெஞ்சை உலுக்கிய சம்பவம்..

உடல் முழுவதும் தீ பரவி துடிக்கும் அவரை கண்டுள்ளனர் . இதனையடுத்து உடனே அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுக்குறித்து மானாமதுரை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.  தொடர்ந்து அங்கு அவர் திவீர சிகிச்சை பெற்று வருகிறார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும் படிக்க:100க்கு போன் போட்டு இது துபாய்ங்ளா? பேலீசையை கலாய்த்த சினிமா தயாரிப்பாளர்.. வச்சு செய்யும் நெட்டீசன்கள்.

இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், லிங்கநாதனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதும், இதனால் கண்வன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் இரு கட்டத்தில் தகராறு முற்றவே அத்திரமடைந்த மனைவி, கணவன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, லிங்கநாதன் மனைவி அங்கயற்கண்ணியை கைது செய்த போலீசார், அவரை  ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவியே தீ வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வழக்கறிஞர் சொல்லி எஸ்.ஐ. மடக்கி கதறவிட்ட அலமேலு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி
போதையில் இளைஞர்கள் அட்டூழியம்.. பள்ளி மாணவிகள் பின்னே சென்று அட்ராசிட்டி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்