நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட விசிக பிரமுகர்.. 7 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் அதிரடி கைது.

Published : Oct 30, 2021, 11:32 AM IST
நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட விசிக பிரமுகர்.. 7 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் அதிரடி கைது.

சுருக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தார். கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு பழைய சிட்டிபாபு தெருவில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போதே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. 

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் கொண்ட கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் சிசிடீவி காட்சிகளை வைத்து விசாரித்து வந்த நிலையில் கொலையாளிகள் கைதாகி உள்ளார். சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு சம்பவமாக கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர தமிழக காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டதின் அடிப்படையில், டிஜிபி சைலேந்திரபாபு தலைமையிலான தமிழக போலீசார் தமிழகம் முழுவதும் ஹிஸ்டரி ஷீட் குற்றப் பின்னணி உள்ள குற்றவாளிகளை குறிவைத்து கைது செய்யும் படலத்தை தொடங்கி அது நடைபெற்று வருகிறது.

பழிவாங்கும் கொலைகள், பணத்திற்கு கொலை செய்யும் கூலிப்படை கொலைகள் போன்றவை அதிகரித்து வருவதால், கூலிப்படை கும்பல்களை குறி வைத்து போலீஸ் வேட்டை நடத்தப் பட்டு வருகிறது. ஆனால் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு சிட்டிபாபு தெருவில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிகயை சேர்ந்த பிரமுகர் இளங்கோவன் என்பவர் ஓட ஒட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது சென்னை போலீசாரை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது, கூலிப்படை கும்பல்கள் வேட்டையாடப்பட்டு வரும் நிலையிலும் இப்படி ஒரு கொலையா என அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், சேத்துப்பட்டு நாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் இவர் அம்பேத்கர் சமூக நல சங்கம் என்ற அமைப்பின் தலைவராக இருந்து வந்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு பழைய சிட்டிபாபு தெருவில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போதே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் பிரபு, புஜ்ஜி ராகேஷ், விஜய், ஆகாஷ், மூர்த்தி, மணிராஜ், தமிழா, என்ற 7 பேர் இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு பயங்கர ஆயுதங்களுடன் தப்பித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேத்துப்பட்டு பகுதியில் குமரவேல் என்பவர் வெல்டிங் கடை நடத்தி வருவதாகவும், அவரது கடைக்கு எதிரே ரமேஷ் என்பவர் டீக்கடை வைத்துள்ளதாகவும், குமரவேலின் வெல்டிங் கடையில் இருந்த இரும்பு துகள்கள் டீக்கடையில் பரவுவதால், இருவருக்கும் இடையே தகராறு  இருந்து வந்ததாகவும், அப்போது வெல்டிங் கடை குமரவேலுவுக்கு ஆதரவாக சஞ்சய் பிரபுவும், டீக்கடை ரமேசுக்கு ஆதரவாக இளங்கோவனும் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருவதால்,

இளங்கோவனுக்கும் சஞ்சை பிரபுவுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது, எனவே இளங்கோவனை தீர்த்து கட்டினார்  சஞ்சய் பிரபு முடிவு செய்ததுடன், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சஞ்சய் பிரபு இளங்கோவனை வெட்டிக் கொன்றதாக அவர்கள் கூறினர். இந்நிலையில் கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என இளங்கோவன் புகார் அளித்திருந்த நிலையில் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்