பள்ளியில் படுபயங்கரம்... 2ம் வகுப்பு மாணவனை மாடியில் தலைகீழாக தொங்க விட்ட ஆசிரியர்..!

By Thiraviaraj RMFirst Published Oct 29, 2021, 7:07 PM IST
Highlights

2ஆம் வகுப்பு மாணவனை பள்ளிக் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், “சாப்பிடும்போது குறும்பு செய்ததற்காக” 2ஆம் வகுப்பு மாணவனை பள்ளிக் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் மாடியில் இருந்து மாணவனை ஆசிரியர் தொங்க விட்டுக் கொண்டிருக்கும் காட்சியை ஏராளமான குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவனின் அலறல் மற்றும் அழுகையைக் கேட்ட குழந்தைகள் கூட்டம் கூடிய பிறகுதான் சோனு விடுவிக்கப்பட்டார் - மேலும் சிறுவனை கீழே இறக்கும்படி தலைமை ஆசிரியர் கட்டாயப்படுத்தப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் லக்ஸ்கர், இது குறித்து விசாரணை நடத்த அடிப்படை கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலும் பள்ளி முதல்வர் மீது புகார் அளிக்கவும் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்:- அரசு பள்ளி ஆசிரியை நடுரோட்டில் கழுத்தறுத்து கொடூர கொலை.. காதலன், நண்பனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!

தகவல்களின்படி, இந்த சம்பவம் வியாழக்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம், அஹ்ராராவில் உள்ள சத்பவ்னா ஷிக்ஷன் சன்ஸ்தான் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. குழந்தைகளை அடிப்பது நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை. பின்தங்கிய குழந்தைகள் பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனையின் தாக்கத்தை தாங்குகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:- ரஜினியின் உச்சக்கட்ட ஆசை... அண்ணாத்த கியாரே செட்டிங்கா..?

பள்ளி முதல்வர் மனோஜ் விஸ்வகர்மா, 2 ஆம் வகுப்பு படிக்கும் சோனு யாதவ் மீது “சாப்பிடும்போது குறும்பு” செய்ததற்காக கோபமடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், மற்ற மாணவர்கள் முன்னிலையில் பாடம் நடத்துவதற்காக குழந்தையின் ஒரு காலை பிடித்து பள்ளி கட்டிடத்தின் முதல் மாடி பால்கனியில் தொங்கவிட்டார். விஸ்வகர்மா கதறிக் கதறி மன்னிப்புக் கேட்ட பிறகே குழந்தையை இழுத்தார். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியாகி வருகின்றனர்

இதையும் படியுங்கள்:- சசிகலா, ஓபிஎஸ் ஒன்று சேரணும்.. எடப்பாடியாரை வெளியேற்றனும்.. பொளந்து கட்டிய புகழேந்தி..!

இதுகுறித்து சோனுவின் தந்தை ரஞ்சித் யாதவ் கூறுகையில், “எனது மகன் மற்ற குழந்தைகளுடன் கோல்கப்பா சாப்பிட சென்றிருந்தான், அவர்கள் முன் கொஞ்சம் குறும்புத்தனமாக நடந்து கொண்டான். இதற்காக எனது மகனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய தண்டனையை தலைமை ஆசிரியர் அளித்துள்ளார்’’ என அவர் தெரிவித்தார்.

ஆனால் தலைமை ஆசிரியரோ, "சோனு ரொம்ப குறும்புக்காரன்... குழந்தைகளைக் கடிக்கிறான், ஆசிரியர்களையும் கடிக்கிறான். அவனுடைய அப்பா அவனைத் திருத்தச் சொன்னார். அதனால், அவனைப் பயமுறுத்த முயற்சித்தோம். பயந்து மேல் தளத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கவிட்டேன்" என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்:- ஆர்யன் கான் மீதான வழக்கு பாஜகவின் சதி... ஜாமீன் கிடைத்ததும் பகீர் குற்றச்சாட்டு..!

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஸ்கர் உத்தரவிட்டார்

click me!