மாந்திரீகத்திற்கு அடிமையான டாக்டர்.. மனைவியை துடிக்க துடிக்க பலி கொடுத்த கொடூரம். 10 மாதம் கழித்து பயங்கரம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 29, 2021, 6:14 PM IST
Highlights

தடயவியல் குழுவினர் மாதிரிகளை சேகரித்தனர், இந்நிலையில் பத்துமாத விசாரணைக்கு பிறகு சென்னேசப்பாவின் கொடூர கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தடய அறிவியல் ஆய்வகத்தில் சில்பா அளவுக்கதிகமான மருந்தை எடுத்துக் கொண்டதால் இறந்தது தெரியவந்தது, 

பூசாரியின் பேச்சை நம்பி சொந்த மனைவியை மருத்துவர் ஊசி போட்டு பலி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மருத்துவரை கைது செய்துள்ளனர்.

மக்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவரை கடவுளாக பாவிக்கிறது மனிதச் சமூகம். அந்த மருத்துவத் தொழிலையே ஆனால் அந்ந மருத்துவ தொழிலையே இழிவுபடுத்தும் வகையில் பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தாங்கள் கற்றுக் கொண்ட மருத்துவத்தை கொண்டு உயிர்களை காப்பாற்றுவதற்கு மாறாக பல பல உயிர்களை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது ஒரு புறமிருக்க அறிவியல் படித்த மருத்துவர் மூடநம்பிக்கையின் பிடியில் சிக்கி தனது சொந்த மனைவியையே ஊசி போட்டுக் கொண்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம்  கர்நாடக மாநிலம் தேவ நகரியில் அரங்கேறியுள்ளது. கணவன் மனைவியை கொன்ற 9 மாதங்களுக்குப் பின்னர் போலீசார் கணவனை கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தேவநகரி மாவட்டம் நயமதி தாலுகாவில் உள்ள ராமேஸ்வரா  கிராமத்தில் மருத்துவராக இருந்து வருகிறார் சென்னேசப்பா (45) அதே பகுதியை சேர்ந்தவர் ஷில்பா (35), இவருக்கும் சென்னேசப்பாவுக்கும் இடையே கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் திடீரென டாக்டர் சென்னேசப்பா மனைவியை ஷில்பா லோபிபி ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் வீட்டிலேயே படுத்த படுக்கையானார், ஆனால் அவரது கணவர் மருத்துவர் என்பதால் தொடர்ந்து மனைவிக்கு அவர் சிகிச்சை அளித்து ஊசி போட்டு வந்தார்.எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவர்களது அவர்களது வாழ்க்கை மெல்ல நகர்ந்தது. சென்னேசப்பா மருத்துவராக இருந்தாலும் அவருக்கு  மூடப்பழக்க வழக்கங்களில் அதிக நம்பிக்கை இருந்து வந்தது. மந்திரம், மாந்திரீகம், அமானுஷ்ய வழிபாடுகளில் அவர் ஈடுபட்டு வந்தார். 

இதையும் படியுங்கள் : பசும்பொன் செல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி இல்லை..? உளவுத் துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

அப்போது அவருக்கு ஒரு பூசாரியின் தொடர்பு ஏற்பட்டது, அந்தப் பூசாரி சொல்லும் பரிகாரங்கள், மந்திர மாந்திரீகங்களை தவறாமல் சென்னேசப்பா செய்து வந்தார். அதே நேரத்தில் மதுப்பழக்கம் புகைப்பழக்கம் கஞ்சா புகைப்பது என பல பழக்கங்களுக்கும் அவர் அடிமையானார். ஒருகட்டத்தில் பலவீனமான மன நிலைமைக்குத் தள்ளப்பட்டார், தொடர்ந்து குடிக்கு அடிமையானதால் அவரால் மருத்துவபணை செய்ய முடியவில்லை. உல்லாசமாக இருக்க அதிக பணம் அவருக்கு தேவைப்பட்டது. இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த பூசாரி விபரீத ஆலோசனை ஒன்று வழங்கினார். அதிகப்பணம் குவிக்க வேண்டுமென்றால், யாராவது ஒரு உயிரை உன் கையில் பலி கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆலோசனை. அதை வேதவாக்காக எடுத்துகொண்ட சென்னேசப்பா,  யாரையாவது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியானார். ஆனால், யாரை கொள்வது என அவர் யோசித்த நிலையில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் கிடக்கும் மனைவியை பலி கொடுக்க விரும்பினார்.

மனைவியை கொன்று கொலை வழக்கில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக அவர் உடல் நிலை  சரி இல்லாமல் இறந்து விட்டார் என்று அனைவரையும் நம்ப வைக்க சென்னேசப்பா முடிவு செய்தார், இதனால் கடந்த பிப்ரவரி மாதம் மனைவியை கொல்ல முடிவு செய்த அவர், தனக்கு தெரிந்த மருந்தை ஆயுதமாக பயன்படுத்தினார், பிப்ரவரி 11, 2021 அன்று அவரது மனைவி ஷில்பாவுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்தை ஊசி மூலம் அளவுக்கு அதிகமாக ஷில்பாவுக்கு செலுத்தினார், இந்த ஊசியை செலுத்திக் கொண்டாள் விரைவில் குணமாகி விடுவாய் என மனைவியிடம் அவர் கூற, அதை நம்பிய மனைவியும் அந்த ஊசியை ஒரு முறைக்கு பலமுறை செலுத்திக் கொண்டார். இதனால் சென்னேசப்பா எதிர்பார்த்தபடி அவரது மனைவி கடுமையான பாதிப்புக்கு ஆளானார், அவரின் நோய் தன்மையை பன் மடங்கு அதிகரித்தது, ஆபத்து கட்டத்தை எட்டிய தன் மனைவியை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வதுபோல பாவலா காட்டினார், அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். 

அப்போது வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமலேயே இறந்துபோன மாணவியை வீட்டிற்கு கொண்டு வந்தார் சென்னேசப்பா, பின்னர் உறவினர்கள் எதிரில் காப்பாற்ற எவ்வளவோ போராடினேன்,ஒரு மருத்துவராக இருந்தும் என்னால் முடியவில்லையே, நோய் அவளை கொண்டுசென்றுவிட்டது கதறினார்,  கண்ணீர் வடித்தார் சென்னேசப்பா, அப்போது உயிரிழந்த மனைவி ஷில்பாவின் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது, அவரது கையில் ஒரு முறைக்கு பல முறை ஊசி குத்தப்பட்ட இடங்களில் தடும்பு அப்பட்டமாக தெரிந்தது. அதுமட்டுமின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலேயே கணவன் சில்பா உடலை வீட்டுக்கு கொண்டு வந்தது ஷில்பாவின் பெற்றோர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஷில்பாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அவரின் மரணத்திற்கு பின்னால் சதி இருப்பதாக அவர்கள் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதையும் படியுங்கள் : ரஜினிகூட தம் அடிப்பாரு ஆனா இந்த அளவுக்கு கெட்ட பெயர் எடுக்கல.. சிகரெட்டால் சிக்கிய தனுஷ்.

தடயவியல் குழுவினர் மாதிரிகளை சேகரித்தனர், இந்நிலையில் பத்துமாத விசாரணைக்கு பிறகு சென்னேசப்பாவின் கொடூர கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தடய அறிவியல் ஆய்வகத்தில் சில்பா அளவுக்கதிகமான மருந்தை எடுத்துக் கொண்டதால் இறந்தது தெரியவந்தது, இதனால் சென்னேசப்பாவின் கொடூரமுகம் அம்பலமானது. குற்றவாளியான மருத்துவர் சென்னேசப்பா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கையின் வலையில் சிக்கி டாக்டர் கணவனே மனைவியை நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!