காதலிக்க மாட்டியா, அப்போ இதுதான் உன் கதி.! கேரளாவை அதிர வைத்த பரபரப்பு சம்பவம்

By Raghupati R  |  First Published Oct 23, 2022, 9:06 PM IST

கேரளாவில், இளம் பெண் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவர் மனைவி பெயர் பிந்து. இவர்களின் மகள் விஷ்ணு பிரியா. இவருக்கு வயது 23. தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை எதுவும் இல்லாமல் சுற்றி திரிந்த சியாம்ஜித் அவரை ஒருதலையாக காதலித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு பிரியா நேற்று வீட்டில் இருப்பதை அறிந்து கொண்ட சியாம்ஜித் அவரது வீட்டிற்கு வந்து உள்ளார். வீட்டில் தனிமையில் இருப்பதை கண்டு கொண்ட சியாம்ஜித் வழக்கம்போல் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கோபத்துடன் கூறியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த சியாம்ஜித் சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். அதில் அந்த இளம்பெண் மயங்கி விழுந்த நிலையில் தன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதிலும் வெறி அடங்காமல் கால்கள் இரண்டையும் கத்தியால் வெட்டி உள்ளார். பின்னர் அவர் உயிரிழந்ததை உறுதி செய்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையும் படிங்க..23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!

பிறகு இதை தொடர்ந்து 3 மணி நேரத்தில் போலீசார் சியாம்ஜித்தை மடக்கி பிடித்தனர். போலீசிடம் பிடிபட்ட சியாம் ஜித் காதலிக்க மறுத்ததால் கோபம் கொண்டு விஷ்ணு பிரியாவை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!

click me!