கோவையில் வெடித்தது யாருடைய கார்.? இறந்த மர்ம நபர் யார்..? சதியா..? விபத்தா..? திணறும் போலீஸ்...!

By Ajmal KhanFirst Published Oct 23, 2022, 2:19 PM IST
Highlights

காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது தொடர்பாக கோவை போலீசார் விசாரணை ஈடுபட்டு வரும் நிலையில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

 கார் சிலிண்டர் வெடித்தது

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் இன்று அதிகாலை வந்த கார், வேகத்தடை ஒன்றில் ஏறி இறங்கியது. அப்போது திடீரென காரில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்தது.  இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது விபத்தா அல்லது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழ்த்தும் நடவடிக்கையா என்ற கோணத்தில் தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் ..110 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று.. வானிலை மையம்

யாருடைய கார்

காரில் சிலிண்டர் வெடித்த இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஆணிகள், சிறுவர்கள் விளையாடக்கூடிக கோழி குண்டு, பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் வெடித்து சிதறிய கார் உரிமையாளரான பொள்ளாச்சியை சேர்ந்த  பிரபாகரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கார் விற்பனை செய்யப்பட்டதாக பிரபாகரன் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கார் டீலரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த காரானது 5 பேர் கை மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து காரின் உரிமையாளரை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். 

தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி தாக்கிய கொடூரம்..! திருப்பதி டோல்கேட்டில் மர்ம நபர்கள் தாக்கியதால் பரபரப்பு

சதியா.? விபத்தா.?

இந்தநிலையில் சம்பவ இடத்தில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார் விபத்து தொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  தடவியல்  துறையினர் சென்னையில் இருந்து வந்துள்ளதாக தெரிவித்தார்.  வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

காரில் இரண்டு சிலிண்டர் இருந்துள்ளதாகவும் அதில்  ஒரு சிலிண்டர் வெடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். காரின் உரிமையாளர் தொடர்பாகவும், உயிரிழந்த நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். சதி செயலா விபத்தா என்பது குறித்து விசாரணை முடிவில் தான் தெரியவரும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

கோவையில் கோயில் அருகே வெடித்த கார்...! சதி செயல் காரணமா..? போலீசார் தீவிர விசாரணை

click me!