
ஜெயங்கொண்டம் அடுத்த பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணகி (50) மற்றும் மலர்விழி (29). இருவரும் நேற்று காலை அருகே உள்ள தைலமரக்காட்டிற்கு உணவு காளான் பறிக்க சைக்கிளில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வீடு திரும்பாததால், மலர்விழியின் கணவர் அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்து இரு குடும்பத்தாரும் அவர்களை தேடி தைலக்காட்டிற்கு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க:தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி தாக்கிய கொடூரம்..! திருப்பதி டோல்கேட்டில் மர்ம நபர்கள் தாக்கியதால் பரபரப்பு
அங்கு தைலமரக்காட்டின் சாலையோரத்தில் சைக்கிள் நின்றுள்ளது. இதையடுத்து, காட்டினுள் சென்று பார்த்தபோது, அங்கு இருவரும் முகம் சிதைந்த நிலையில், அரிவாளால் வெட்டப்பட்டு இறந்து கிடந்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:திடீரென வெடித்த சிலிண்டர்..! இரண்டாக உடைந்த கார்...! துடி துடித்து ஒருவர் பலி
முதற்கட்ட விசாரணையில் மலர்விழி கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சங்கிலி திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே நகைக்காக இரட்டை கொலை அரங்கேறியுள்ளதாக அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொலை நடந்துள்ளதாக என பல்வேறு காரணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.