டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Oct 22, 2022, 11:30 PM IST

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான நாளைய போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.


டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், அடுத்த போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

நாளை மெல்போர்னில் நடக்கும் போட்டியில் கிரிக்கெட் உலகில் அனைவராலும் ஆவலுடன் எதிர்நோக்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான ஆடும் லெவனை ஏற்கனவே உறுதி செய்து வீரர்களிடம் தெரிவித்துவிட்டதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியிருந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - முடியாததை முடித்து காட்டியிருக்கார்.. இப்படி ஒரு வீரரை நான் பார்த்ததே இல்ல! இந்திய வீரருக்கு பாண்டிங் புகழாரம்

இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் - இதுதான் பேட்டிங் ஆர்டர். ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது ஆஸ்திரேலியா

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

click me!