வேலூரில் பெண் மருத்துவர் கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம்.. குற்றவாளிகளுக்கு சரியான ஆப்பு..!

By vinoth kumar  |  First Published Apr 15, 2022, 1:11 PM IST

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இளம்பெண் ஊழியர் கடந்த 16ம் தேதி ஆண் நண்பருடன் காட்பாடியில் உள்ள சினிமா தியேட்டரில் இரவு காட்சி பார்க்க சென்றுள்ளார். படம் முடிந்து நள்ளிரவு 12.30 மணியளவில் 2 பேரும் தியேட்டர் முன்பாக ஆட்டோவுக்காக காத்து நின்றனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அதன் டிரைவர் அவர்களிடம் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார்.


வேலூரில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டன், சந்தோஷ், பார்த்திபன், பரத் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கூட்டு பாலியல் பலாத்காரம்

Tap to resize

Latest Videos

undefined

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் கடந்த 16ம் தேதி ஆண் நண்பருடன் காட்பாடியில் உள்ள சினிமா தியேட்டரில் இரவு காட்சி பார்க்க சென்றுள்ளார். படம் முடிந்து நள்ளிரவு 12.30 மணியளவில் 2 பேரும் தியேட்டர் முன்பாக ஆட்டோவுக்காக காத்து நின்றனர். அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அதன் டிரைவர் அவர்களிடம் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி உள்ளனர். ஆட்டோவில் ஏற்கனவே 3 பேர் இருந்ததால் ஷேர் ஆட்டோ என நினைத்தது ஆட்டோவில் ஏறியுள்ளனர். 

கைது

அப்போது, ஆண் நண்பரை அடித்து உதைத்து கத்தி முனையில் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த செல்போன், ஏடிஎம் கார்டுகளை பிடுங்கிகொண்டு ஆட்டோவில் தப்பியுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 22-ம் தேதி பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில் 2 சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

குண்டர் சட்டம்

இதனையடுத்து, 5 பேரை கைது சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட மணிகண்டன், சந்தோஷ், பார்த்திபன், பரத் ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ராஜேஷ் கண்ணன் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- கஷ்டப்பட்டு கரெக்ட் செய்த கள்ளக்காதலியை கூடவே இருந்து ஆட்டையை போட்ட நண்பர்.. ஒராண்டு பிறகு வெளிவந்த உண்மை..!

click me!