பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத நண்பருக்கு ‘தர்ம அடி’ கொடுத்த நண்பர்கள்.. வேற மாதிரி சம்பவம் !

Published : Apr 15, 2022, 10:51 AM IST
பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத நண்பருக்கு ‘தர்ம அடி’ கொடுத்த நண்பர்கள்.. வேற மாதிரி சம்பவம் !

சுருக்கம்

கோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் 26, நரசிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் 27, இருவரும் லோடு வேன் வைத்து ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரேம்குமாருகும் ஹரி பிரசாத்துக்கும் இடையே லேன் ஓட்டுவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று மாலை பிரேம்குமார் தனது வேனில் நரசிபுரம் சென்றார். அப்போது அங்கிருந்த ஹரிபிரசாத் திடீரென பிரேம்குமார் தடுத்து நிறுத்தினார். 

குடிபோதையில் இருந்த ஹரி பிரசாத் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறும் படி தெரிவித்தார். அதற்கு பிரேம்குமார் அவர் யார் எனக்கு தெரியாது எனக் கூறி வாழ்த்து தெரிவிக்க மறுத்துவிட்டார் பின்னர் அதனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஹரி பிரசாத் தனது பைக்கை எடுத்துக் கொண்டு பிரேம்குமார் பின் தொடர்ந்து சென்றார். 

மீண்டும் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது ஆத்திரமடைந்த ஹரிபிரசாத் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தார் இதில் காயமடைந்த பிரேம்குமார் அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பிரேம்குமார் பலமுறை போலீசில் புகார் தெரிவித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க : Gold Rate Today : புது உச்சத்தை தொட்ட தங்கம்.. தாறுமாறு விலை அதிகரிப்பால் பொதுமக்கள் கவலை.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!