காதலிப்பதாக கூறி இளம் பெண்களுடன் உல்லாசம்.. நிர்வாணப்படத்தை காட்டி 25 சவரன் பறித்த சீட்டிங் காதலன்.

Published : Apr 14, 2022, 04:03 PM IST
காதலிப்பதாக கூறி இளம் பெண்களுடன் உல்லாசம்..  நிர்வாணப்படத்தை காட்டி 25 சவரன் பறித்த சீட்டிங் காதலன்.

சுருக்கம்

கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி  அந்தப் பெண்ணின் நிர்வாண படங்களை வாங்கி, பின்னர் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, 25 சவரன் தங்க நகைகளை பறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி  அந்தப் பெண்ணின் நிர்வாண படங்களை வாங்கி, பின்னர் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, 25 சவரன் தங்க நகைகளை பறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காதலிப்பது போல் நடித்து உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் காதலிப்பது போல நடித்து பெண்ணின் நிர்வாணப் படத்தை பெற்று அந்த பெண்ணிடம் மோசடி செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்த தம்பதியருக்கு ஒரு ஆண் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். தனது மகனுக்கு பெண் பார்க்க முடிவெடுத்த தம்பதியர் இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களது வீட்டில் இருந்த 25 சவரன் நகை மாயமானது, அது குறித்து  கல்லூரி படிக்கும்  மகளிடம் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் கூறியதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர்கள் அந்தப் பெண்ணுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்தனர். ஆனால் அந்தப் பெண் அதை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என ஆக்டிவாக இருந்துள்ளார். அப்போது திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த விஷ்வா என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பேசி வந்த நிலையில், அது காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் அந்த இளைஞன் சொல்வதையெல்லாம் மாணவி கேட்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் நிர்வாண படத்தை விஷ்வா கேட்க அந்தப் பெண்டும் அதை அனுப்பி வைத்தார். பிறகு தான் விஷ்வாவின்  உண்மை முகம் தெரிய ஆரம்பித்தது.

அதாவது நிர்வாண படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டியதுடன், அந்தப் பெண்ணிடம் இருந்த பணம் நகைகளை பறித்துள்ளார் இந்நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் கொடுத்தனர். இதனையடுத்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த விஷ்வாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை பணம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். EEE வரை படித்துள்ள விஷ்வா இளம்பெண்களிடம் காதலிப்பது போல் நடித்து, அவர்களிடம் பணம் பறிப்பதையே வேலையாக வைத்திருந்தது தெரியவந்தது.

இதேபோல இன்னும் வேறு சில பெண்களுடன் அவர் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களையும் போலீசார் கைப்பற்றினர். தன்னிடம் சிக்கும் பெண்களை ஊட்டி கொடைக்கானல் என அழைத்து சென்று அங்கு அவர் உல்லாசம் அனுபவித்து வந்ததும் தெரியவந்தது. அப்போது தவறாமல் அவர்களின் போட்டோக்களை எடுத்து வைத்துக் கொண்டு அதில் பணம் பறித்து வந்ததும்  தெரியவந்தது. 
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!