சிறுநீர் கழிக்கும் போது ஏற்பட்ட வயிற்று வலி.. ஆணுறுப்பை வெட்டிய அதிர்ச்சி சம்பவம் !

By Raghupati R  |  First Published Sep 4, 2022, 3:33 PM IST

சிறுநீர் கழிக்கும்போது தாங்கமுடியாத வலியால் ஆண் ஒருவர் தன்னுடைய ஆணுறுப்பை கோடரியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம், தமோஹ் மாவட்டத்தில் தான் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. மெஹ்ரோன் என்ற இடத்தில் வசிப்பவர் நித்தியானந்த் திவாரி. இவருக்கு வயது 75 ஆகும். இவர் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர் சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !

மேலும், அவரின் ஆணுறுப்பிலும் கடுமையான வலி இருந்து வந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சிறுநீர் கழிப்பது என்பது நித்தியானந்த் திவாரிக்கு நரக வேதனையாக இருந்தது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்துகொண்ட போதும் பலனலிக்கவில்லை. சம்பவத்தன்று,  வழக்கம் போல் சிறுநீர் கழித்தபோது கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?

உடனே வீட்டிற்குள் சென்ற திவாரி அங்கு இருந்த கோடரியை எடுத்து வந்து தன்னுடைய ஆணுறுப்பை வெட்டி எடுத்துவிட்டார். இதையடுத்து ரத்தப்போக்கு அதிகமாக வலியால் கத்தியுள்ளார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெட்டிய ஆணுறுப்பை இணைக்க முடியாது என தெரிவித்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!