21 வயது பொறியியல் கல்லூரி மாணவியை, ஹோட்டல் அறையில் வைத்து காதலன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூரு நகரில் இன்ஜினியரிங் மாணவி ஹோட்டலில் கொலை செய்யப்பட்டார். காதலனை போலீசார் கைது செய்தனர். மைசூர் ஹுன்சூர் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ஹரலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அபூர்வா ஷெட்டி. இவருக்கு வயது 21 ஆகும்.
undefined
மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !
அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் அபூர்வா. விஜயநகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, அபூர்வாவும், அவரது காதலன் ஹின்கல் பகுதியைச் சேர்ந்த ஆஷியும் அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை புக் செய்துள்ளனர். செப்டம்பர் 1ஆம் தேதி காலை அறையை விட்டு வெளியே சென்ற ஆஷி, பல மணிநேரம் கடந்தும் திரும்பாததால், ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
அவர்கள் உடனே இண்டர்காம் மூலம் அறையைத் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், பதில் வராததால் அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் வந்து அறையை திறந்து பார்த்தபோது, அபூர்வா சடலமாக கிடந்தார். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. இதனை தொடர்ந்து, ஆஷி வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு..அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?
அபூர்வா மற்றும் ஆஷி இடையேயான காதல் உறவை அறிந்த அபூர்வாவின் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். ஆனால், குடும்பத்தை மீறி ஒருவரை ஒருவர் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விசாரணை முடிந்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !