படிப்பில் மகளை முந்திய மாணவன்... ஆத்திரத்தில் மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை..? மாணவியின் தாய் கைது...

Published : Sep 03, 2022, 05:13 PM ISTUpdated : Sep 04, 2022, 08:23 AM IST
படிப்பில் மகளை முந்திய மாணவன்... ஆத்திரத்தில்  மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை..? மாணவியின் தாய் கைது...

சுருக்கம்

படிப்பில் தன் மகளை விட முந்திய  மாணவனுக்கு மாணவியின் பெற்றோர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ள சம்பவத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

படிப்பில் தன் மகளை விட முந்திய  மாணவனுக்கு மாணவியின் பெற்றோர் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில்  மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவன் இன்று காலை உயரிழந்துள்ளார். 

படிப்பில் போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வது உண்டு... காரணம் போட்டி போட்டு படித்தால் அனைவரும் உயரலாம் ஆனால் அதில் பொறாமை  நுழைந்தால் அது மொத்த படிப்பையும் சீரழித்துவிடும் என்பதற்காகத்தான் அப்படி சொல்லப்பட்டது. யாராக இருந்தாலும் படிப்பில் ஆர்வம் காட்டினால் அவர்களை  ஊக்கப்படுத்தி தட்டிக் கொடுப்பது தான் மனித பண்பாக இருக்க முடியும், ஆனால் அவர்களை மட்டம் தட்டி, காயப்படுத்துவது கேடுகெட்ட செயலாகவே இருக்கமுடியும்.

இப்படிப்பட்ட ஒரு செயல் காரைக்காலில் நடந்துள்ளது, தன் மகளை விட படிப்பில் முந்திய மாணவனை தீர்த்துக்கட்ட மாணவியின் பெற்றோர் முயன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது, காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் அதே பகுதியில்  தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அவரது இரண்டாவது மகன் பால மணிகண்டன், அங்குள்ள தனியார் பள்ளிகள் 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார்,  பால மணிகண்டன் படிப்பதில்  படு சுட்டியாக இருந்துவந்தார், வகுப்பில் எப்போதும் முதல் ரேங்க் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் அதே பள்ளியில் படிக்கும் மாணவிக்கும் பாலமணிகன்டனுக்கும்  போட்டி இருந்ததாக கூறப்படுகிறது, இது ஒரு கட்டத்தில் பொறாமையாக மாறியது, இதனால் தனது மகளை விட படிப்பில் முந்தும் பால  மணிகண்டனை தீர்த்துக்கட்ட மாணவியின் பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக நேரம் பார்த்து காத்திருந்தனர்.  சம்பவத்தன்று பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் ஈடுபட்டுவிட்டு சிறுவன் பால மணிகண்டன் வீடு திரும்பினார், அப்போது பால மணிகண்டனை வழிமறித்து மாணவியின்  தாய் சகாயராணி விக்டோரியா குளிர்பானம் கொடுத்துள்ளார்.

அதை குடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவனுக்கு வீட்டில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது, அப்போது என்ன ஆயிற்று என்றும் அவரிடம் விசாரித்ததில் பள்ளிக்கூடத்தில் குளிர்பானம் குடித்ததாக கூறினார், இதையடுத்து பள்ளிக்கூடம் சென்று பெற்றோர்கள் விசாரித்தனர், பின்னர் அங்கிருந்த  சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர் அப்போது அங்கு மாணவனுடன் படிக்கும் சக மாணவியின் பெற்றோர் பால மணிகண்டனுக்கு குளிர்பானம் தருவது  பதிவாகியிருந்தது.

தன் மகளை விட படிப்பில் மாணவன் சிறந்து விளங்குவதால், பொறாமையில் சகாயராணி விக்டோரியா இந்த செயலில் ஈடுபட்டதாக மாணவியின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு  உயிரிழந்துள்ளார். மாணவன் உயரிழந்த சம்பவத்தார் ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கி சூறையாடினர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த்தாக கூறி சகாயராணியை போலீசார் கைது செய்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!