ஆட்டோவில் பயணித்த பெண்ணில் மார்பகத்தில் கை வைத்து ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் .
ஆட்டோவில் பயணித்த பெண்ணில் மார்பகத்தில் கை வைத்து ஆட்டோ ஓட்டுநர் அத்துமீறியுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் .
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, பொது போக்குவரத்தை, வேலை செய்யும் என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான செயல்கள் அரங்கேறி வருகிறது.இந்த வரிசையில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுனர் அத்துமீறியுள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-
இளம்பெண் ஒருவர் தனது தோழியுடன் இரவு சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு சென்றார் அதற்காக ஊபர் ஆட்டோ புக் செய்தார், செல்வம் என்ற ஆட்டோ ஓட்டுனர் பிக்அப் செய்ய வந்தார், பின்னர் அந்த பெண்கள் இருவரும் ஆட்டோவில் பயணித்தனர் அப்போது ஹோட்டல் வாசலில் அவர்கள் இறங்கினர் அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்த பெண்ணின் மார்பில் கை வைத்து அழுத்திய தாக கூறப்படுகிறது, இதில் அலறியடித்து ஆட்டோவில் இருந்து மற்றொரு பெண் வெளியில் ஓடிவந்தார்.
இதையும் படியுங்கள்: பணத்தை திருப்பிக் கேட்ட அதிமுக பிரமுகர்! ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த நிதி நிறுவன பெண் ஏஜெண்ட்!விசாரணையில் பகீர்
அதைக் கண்டு பதற்றம் அடைந்த தோழி என்ன நடந்தது என கேட்டார், அந்தப்பெண் நடந்தவற்றை கூறினார், பின்னர் இருவரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க முயற்சித்தனர், ஆனால் ஆட்டோ ஓட்டுனர் அதற்குள் அங்கிருந்து தப்பினார், உடனே அந்த பெண் நடந்த வற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார், 100க்கு அழைத்து புகார் கொடுத்தார். அதன் பின்னர் செம்மஞ்சேரி காவல் ஆய்வாளர் ஹோட்டலுக்கு விரைந்து வந்தார். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர், இரவில் பெண் அதிகாரிகள் யாரும் காவல் நிலையத்தில் இல்லாததால், விசாரணைக்கு காலையில் வருமாறு கூறிவிட்டுச் சென்றார்.
ஆனால் அந்தப் பெண்கள் புகார் கொடுக்கிறோம் இப்போதே அந்த நபரை கைது செய்யுங்கள் என காவல் ஆய்வாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல் ஆய்வாளர் காலையில் வாருங்கள் பார்த்திக் கொள்ளலாம் என கூறி விட்டு சென்றார். பின்னர் அவர்கள் ஓட்டல் ஊழியர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றனர். ஆனாலும் இரவு நேரத்தில் பெண்களை காவல் நிலையத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி அப்பெண்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
இதையும் படியுங்கள்: தன்னை ஆசைதீர அனுபவித்தவனை அலறவிட்ட விமான பணிப்பெண்.. அறையில் பூட்டிவைத்து எடுத்த ரிவென்ஜ்.
புகார் கொடுத்தும் போலீசார் புகாரை வாங்கவில்லை, என அந்த பெண்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக அந்த குறிப்பிட்ட ஆட்டோ டிரைவரின் விவரங்களை அவர்கள் புகாரில் தெரிவித்தனர், அந்த ஆட்டோ ஓட்டுனர் எனது மார்பகங்களை தொட்டு அழுத்தினார், நான் அலறினேன் ஆனால் அந்த நபர் சிரித்தார், அவன் முகத்தை என்னால் மறக்கவே முடியாது என்றும் அந்த பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஓட்டுனரை கைது செய்துள்ளனர்.