சம்பாதிக்கிற பணத்தை கள்ளக்காதலியிடம் கொடுத்து உல்லாசம்! கணவர் ஓயாத டார்ச்சர்! ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்

Published : Sep 28, 2022, 11:35 AM IST
சம்பாதிக்கிற பணத்தை கள்ளக்காதலியிடம் கொடுத்து உல்லாசம்! கணவர் ஓயாத டார்ச்சர்! ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்

சுருக்கம்

 சீராளன் சரிவர வீட்டிற்கு வருவதில்லை. தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து பலமுறை எச்சரித்தும் திருந்தவில்லை. குடும்பம் நடத்த பணம் தருவதில்லை. மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குழந்தைகளையும், தன்னையும்  அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிவித்தார்.

தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்த கணவரை மனைவி கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த உரியூர் கிராமத்தை சேர்ந்தவர் சீராளன்(38), ரேடியோ சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஷோபனா(30). இவர்களுக்கு தின்ஷா(10) என்ற மகளும், சஷ்வந்த்(8) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சீராளன் தனது வீட்டின் வாசலில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  சீராளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 சீராளன் தலையில் பலமாக அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனிடையே, ஷோபனா தனது மகன், மகள் ஆகியோரை தாய் வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களை தங்கையிடம் ஒப்படைத்துவிட்டு மப்பேடு காவல்நிலையத்திற்கு சென்று, தனது கணவரை குடும்ப பிரச்சனை காரணமாக கடப்பாரையால் அடித்தும், கட்டுக்கல்லை போட்டும் கொலை செய்துவிட்டேன் எனக்கூறி சரணடைந்தார். 

இதுதொடர்பாக மப்பேடு போலீசார் தக்கோலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தக்கோலம் போலீசார், மப்பேடு சென்று ஷோபனாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது, அவர் கூறுகையில்;- சீராளன் சரிவர வீட்டிற்கு வருவதில்லை. தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து பலமுறை எச்சரித்தும் திருந்தவில்லை. குடும்பம் நடத்த பணம் தருவதில்லை. மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குழந்தைகளையும், தன்னையும்  அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிவித்தார்.

அதேபோல் நேற்று முன்தினம் சீராளன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.  இதனால், ஆத்திரமடைந்த ஷோபனா அருகில் இருந்த கடப்பாரையால், சீராளனின் தலையில் அடித்து, வீட்டிற்கு வெளியே இருந்த கட்டுக்கல்லை எடுத்து கணவரின் தலை மீது போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. குடும்ப தகராறில் கணவரை, மனைவியே கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!