அரிவாள் வெட்டு.. சினிமா பாணியில் தப்பிக்க முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்.. சென்னையில் பயங்கரம்..!

Published : Sep 28, 2022, 09:51 AM ISTUpdated : Sep 28, 2022, 09:56 AM IST
அரிவாள் வெட்டு.. சினிமா பாணியில் தப்பிக்க முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்.. சென்னையில் பயங்கரம்..!

சுருக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம்  எருமையூரை சேர்ந்த ரவுடி லெனின், இவரது வலது கையாக செயல்பட்டு வந்த ரவுடி சச்சின்(22). இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

தாம்பரம் அருகே சச்சின் என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது காவலர் பாஸ்கரை அரிவாளால் தாக்கியுள்ளார். இதனையடுத்து, தப்ப முயன்ற ரவுடி சச்சினை காலில் சுட்டு போலீசார் பிடித்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம்  எருமையூரை சேர்ந்த ரவுடி லெனின், இவரது வலது கையாக செயல்பட்டு வந்த ரவுடி சச்சின்(22). இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த சச்சின் நடுவீரப்பட்டு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையும் படிங்க;- பணத்தை திருப்பிக் கேட்ட அதிமுக பிரமுகர்! ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த நிதி நிறுவன பெண் ஏஜெண்ட்!விசாரணையில் பகீர்

இதனையடுத்து, தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவுபடி தனிப்படை அமைக்கப்பட்டு சோமங்கலம் காவல் ஆய்வாளர் சிவகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் ரவுடி சச்சினை இன்று அதிகாலை பிடிக்க வந்துள்ளனர். அங்கு சென்று பிடிக்க முயன்றபோது, ரவுடி சச்சின் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். ஆனால், அந்த நாட்டு வெடிகுண்டு வெடிக்கவில்லை.  இதனையடுத்து, காவலர் பாஸ்கரை இடது தோளில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். 

இதையும் படிங்க;- காலில் விழுந்து கெஞ்சிய மனைவி, மாமியார்.. விடாமல்.. வீடு புகுந்து மனைவி கண்ணெதிரே பிரபல ரவுடி வெட்டி படுகொலை.!

அப்போது, காவல் ஆய்வாளர் சிவக்குமார் ரவுடி சச்சின் வலது கால் தொடையில் துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார். உடனே தப்பி ஓட முயன்ற ரவுடியை காவல் துறையினர் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். இதனையடுத்து, காயமடைந்த  காவலர் பாஸ்கர் மற்றும் ரவுடி சச்சின்  இருவரும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ரவுடி சச்சின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வெடிகுண்டு வீசி, அரிவாளால் போலீசார் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!