கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபயிற்சி மேற்கொண்ட போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்திபன் (53). இவர் அதிமுக அம்மா பேரவையில் மாவட்ட இணைச் செயலாளராக இருந்தார். அதோடு, பாடியநல்லூர் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவராக இருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபயிற்சி மேற்கொண்ட போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க;- நள்ளிரவில் பயங்கரம்.. செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற A+ ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து தனிப்படை போலீசார் டெல்லி சென்று இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னைக்கு அழைத்து வரப்பட்ட கூலிப்படை தலைவன் உள்ளிட்ட இருவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்த போது சோழவரம் போலீசார் இருவரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
இதையும் படிங்க;- உன் மூஞ்சிக்கு மெடிக்கல் காலேஜ் பொண்ணு கேக்குதா! விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட ஆவின் ஊழியர் கொலை..!
முத்துசரவணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி முத்து சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.