உன் மூஞ்சிக்கு மெடிக்கல் காலேஜ் பொண்ணு கேக்குதா! விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட ஆவின் ஊழியர் கொலை..!

By vinoth kumar  |  First Published Oct 11, 2023, 1:31 PM IST

திருவாரூர் மாவட்டம் சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். பொறியியல் பட்டதாரி. இவர் திருவாரூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வாஞ்சியூர் என்ற இடத்தில் சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.


திருவாரூர் அருகே ஆவின் ஊழியர் ராமசந்திரன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

திருவாரூர் மாவட்டம் சேந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். பொறியியல் பட்டதாரி. இவர் திருவாரூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வாஞ்சியூர் என்ற இடத்தில் சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- பள்ளி மாணவியை கரெக்ட் செய்து எஸ்கேப்பான 50 வயது ஆசிரியர்.. நெருக்கமான புகைப்படம் வைரல்..!

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தலையில் வெட்டு காயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் நாகை மாவட்டம் ஆந்தங்குடியை சேர்ந்த மருத்துவக்கல்லுரி மாணவியை ராமசந்திரன் காதலித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க;-  ஐயோ.. அம்மா என்ன காப்பாத்துங்க.. அலறிய இளைஞரை அரிவாளால் சல்லி சல்லியாய் வெட்டிய கும்பல்!

இதற்கு மாணவியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாணவியின் உறவினரான நந்தா என்ற வீரத்தமிழன் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ராமசந்திரனை வெட்டி படுகொலை செய்து விபத்தில் உயிரிழந்தது போல் சாலையோரத்தில் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பெண்ணின் குடும்பத்தினர் வீட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தீவிர விசாரணை நடைபெறுகிறது. முதலில் ராமச்சந்திரன் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!