கஞ்சா போதையில் வாலிபரை சரமாரியாக வெட்டிய கொலை செய்த முதியவர்; திருப்பத்தூரில் பரபரப்பு

Published : Oct 11, 2023, 02:37 PM ISTUpdated : Jul 20, 2024, 12:21 AM IST
கஞ்சா போதையில் வாலிபரை  சரமாரியாக வெட்டிய கொலை செய்த முதியவர்; திருப்பத்தூரில் பரபரப்பு

சுருக்கம்

திருப்பத்தூரில் கஞ்சா போதை முற்றிய நிலையில், வாலிபரை வெட்டி கொலை செய்த முதியவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏகே.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரது மகன் வெங்கடேசன் (வயது 55). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் மகன் சிலம்பரசன் (33). இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் சிலம்பரசன் வாத்து வளர்த்து வருகிறார். அவருடைய வாத்து நேற்று வெங்கடேசனின் வீட்டின் அருகே வந்துள்ளது. அதனைப் பிடிக்கச் சென்ற சிலம்பரசனை கஞ்சா போதையில் இருந்த வெங்கடேசன் செடிக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சர மாறியாக வெட்டியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே துடி துடித்து சிலம்பரசன் உயிரிழந்தார்.

4 வழிச்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி கிடையாது; அமைச்சர் வேலுவின் தகவலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் அளவுக்கு அதிகமான கஞ்சா போதையில் இருந்த வெங்கடேசன் அங்கிருந்து அருகே உள்ள மாந்தோப்புக்கு தப்பி சென்றுள்ளார். அப்போது மாந்தோப்பில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் இருந்துள்ளனர். அவர்களையும் கத்தியை காட்டி வெட்டி விடுவதாக மிரட்டியுள்ளார். இதன் காரணமாக அந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு; காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு

பின்னர் இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் கிராமிய போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் சிலம்பரசனின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வெங்கடேசனை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு  வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!