கோவையில் வீட்டில் தனியாக இருந்த திருநங்கை கொடூரமாக வெட்டி படுகொலை - போலீஸ் விசாரணை

By Velmurugan s  |  First Published Jan 30, 2024, 1:56 PM IST

கோவையில் வீட்டில் தனியாக இருந்த திருநங்கையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை தெலுங்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி என்கிற சோமசுந்தரம் (வயது 37). திருநங்கை.  இவர் வடவள்ளி அடுத்த மருதமலை  இந்திரா நகர் பகுதியில் உள்ள மாசிலாமணி (33) என்ற திருநங்கை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.  மேலும் மாசிலாமணி மற்றும் அவருடன் தங்கி இருக்கும் மணி, தனலட்சுமி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள் என கூறப்படுகிறது. 

இந்து மதத்தின் மீது நம்பிக்கை அல்லாதவர்கள் பழனி முருகன் கோவிலில் நுழைய தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தனலட்சுமி மதியம் மாசிலாமணி வீட்டுக்கு வந்துள்ளார். மூவரும் வீட்டில் இருந்த நிலையில்,  மாசிலாமணி மற்றும் மணி  இருவரும் மாலை 4 மணிக்கு  வெளியே சென்றுள்ளனர்.  பின்னர் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது தனலட்சுமி உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.  

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி தனியார் பள்ளி ஆசிரியை பலி

இது குறித்து உடனடியாக மாசிலாமணி வடவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி ஆய்வாளர் கண்ணையன் தலைமையிலான போலீசார் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர். பிறகு மோப்பநாய் உதவியுடன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.  இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர காவல்துறை ஆணையர் சரவணகுமார்,  மற்றும் உதவி ஆணையர் ரவிக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!