பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கு: 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

By Manikanda Prabu  |  First Published Jan 30, 2024, 1:30 PM IST

பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


பாஜக கேரள மாநிலக் குழு உறுப்பினரும், ஓபிசி மோர்ச்சா மாநிலச் செயலாளருமான வழக்கறிஞர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆலப்புழா அருகே உள்ள அவரது வீட்டிற்குள் நுழந்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று, அவரது தாய், மனைவி, மகள் முன்பு ரஞ்சித் ஸ்ரீனிவாசனை கொலை செய்தது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று ஆலப்புழாவின் மண்ணஞ்சேரியில் SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷான் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியதாக கருதப்படுகிறது.

Latest Videos

undefined

வீடியோ பார்த்தால் பணம் கொட்டும்.. போலீசாரை மிரட்டும் MYV3Ads எம்.டி சத்யானந்த்? அதிர வைக்கும் ஆடியோ.!

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆலப்புழா காவல் துனை கண்காணிப்பாளர் என்.ஆர்.ஜெயராஜ் தீவிர விசாரணை நடத்தி, 1,000க்கும் மேற்பட்ட ஆவணங்களையும், 100க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களையும் இணைத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். கைரேகைகள், தடயவியல் கண்டுபிடிப்புகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் கூகுள் மேப் உதவியுடன் தயாரிக்கப்பட்ட வழித்தடங்கள் ஆகியவை ஆதாரங்களாக அளிக்கப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்து வந்த மாவேலிக்கரை அமர்வு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிஜாம், அஜ்மல், அனூப், எம்டி அஸ்லாம், சலாம், அப்துல் கலாம், சஃபாருதீன், முன்ஷாத், ஜசீப், நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி மற்றும் ஷாம்னாஸ் ஆகிய 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. வழக்கில் முதன்மையாக குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் கொலையில் நேரடியாகத் தொடர்புள்ளவர்கள் என்றும், மீதமுள்ள நபர்கள் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

கண் பார்வையை இழந்தாலும் மன உறுதியை இழக்காத ராணுவ வீரர்: ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் சாதனை!

அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் 15 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் SDPI கட்சி உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!