மதுரை எம்.கே.புரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
மதுரை திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை எம்.கே.புரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் 78 வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5க்கும் மேற்பட்ட கும்பல் திருமுருகனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
undefined
இதையும் படிங்க: அண்ணியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த கொழுந்தன்கள்.. அண்ணனே உடந்தை.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
ரத்த வெள்ளத்தில் சரிந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: புருஷனை கழட்டிவிட்டு எஸ்கேப்பான மனைவி.. இறுதியில் கள்ளக்காதலனுக்கும் அதிர்ச்சி கொடுத்த பெண்..!
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசியல் முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.