அந்த வார்த்தையை சொல்லி சொல்லி அவமானம்... மல்லாக்காக படுத்திருந்த கணவனின் ஆணுறுப்பை அடியோடு அறுத்து மனைவி.

Published : Sep 28, 2022, 07:19 PM ISTUpdated : Sep 28, 2022, 07:20 PM IST
அந்த வார்த்தையை சொல்லி சொல்லி அவமானம்... மல்லாக்காக படுத்திருந்த கணவனின் ஆணுறுப்பை அடியோடு அறுத்து மனைவி.

சுருக்கம்

தொடர்ந்து கணவன் தன் நிறத்தை கூறி இழிவுப்படுத்தி வந்த நிலையில் மனைவி கணவனின் ஆணுறுப்பை அறுத்து எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  

தொடர்ந்து கணவன் தன் நிறத்தை கூறி இழிவுப்படுத்தி வந்த நிலையில் மனைவி கணவனின் ஆணுறுப்பை அறுத்து எறிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என கூறப்படுவது உண்டு, ஆனால் சில திருமண உறவுகள் தவறான புரிதல் காரணமாக நரகமாக மாறும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. மனைவி வரதட்சணை கொடுக்கவில்லை, அழகாக இல்லை, லட்சணமாக இல்லை என கணவன்கள் துன்புறுத்தும் சம்பவங்கள் பரவலாக அதிகரித்துள்ளது. இதே நேரத்தில் மருமகள்களும் மாமியார்களை அவமரியாதை செய்வது போன்ற சம்பவங்களும் நடந்து வருகிறது.

இன்னும் சில கணவன்மார்கள் திருமணத்திற்குப் பின்னர் வேறு சில பெண்களுடன் தவறான உறவு வைத்துக்கொண்டு மனைவிகளை இழிவுபடுத்துவது, அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி பல்வேறு விதமான குழப்பங்கள் சண்டை சச்சரவுகள் கணவன் மனைவிக்கு இடையே அரங்கேறி வருகிறது. ஆனால் இவைகள் ஒரு கட்டத்தில் எல்லையைத் தாண்டும் போது அது கொலையிலோ, தற்கொலையிலோ முடிந்துவிடுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  டியூசன் மாணவிகளுக்கு இரவு நேரத்தில் ஆபாச மெசேஜ்.. சேட்டை செய்த பி.டி வாத்தியாரை அலேக்காக தூக்கிய போலீஸ் !

முழுவிவரம் பின்வருமாறு:- சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் அமலேஸ்வர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வானி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கீதாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். இந்நிலையில் சில மாதங்களாக ஆனந்த் தனது மனைவியின் கருமை நிறத்தை கூறி அவமானப்படுத்தி வந்தார். அவரது உடலில் இருந்த சில தழும்புகளை வைத்து மனைவியை கிண்டல் செய்து சித்திரவதை செய்து வந்தார். இது மனைவியின் மனதை காயப்படுத்தியது, பலமுறை தனது கணவனிடம் இதுபோன்று பேச வேண்டாம் என அவர் கூறி வந்தார்.

ஆனால் கணவன் அதை பொருட்படுத்தவில்லை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, கணவன் தன்னை தொடர்ந்து இழிவுபடுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாத மனைவி கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார், இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இதே காரணத்துக்காக கணவனுடன் தகராறு ஏற்பட்டது, கணவன் சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றதும் மனைவி கத்தியை எடுத்து கணவரின் ஆணுறுப்பை துண்டாக வெட்டி எடுத்தார்.  அப்போது தூக்கத்திலேயே கணவன் உயிர் பிரிந்தது.

இதையும் படியுங்கள்: 90 வயது மூதாட்டியுடன் சண்டை.. மூதாட்டியின் முகத்தில் மலத்தை பூசிய நபர் - அதிர்ச்சி சம்பவம்

பிறகு தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல உறங்கச் சென்றுவிட்டார். காலையில் எழுந்து ஐயோ தனது கணவனை யாரோ கொலை செய்து விட்டார்களே என கதறினார், தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவிடம் விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக  தகவல் அளித்தார், அதில் சந்தேகம் அடைந்த போலீசார்  தங்கள் பாணியில் விசாரித்தனர். பின்னர் மனைவி கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார், பின்னர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மனைவியை சிறையில் அடைத்தனர்.  
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி