வியாழக்கிழமை அதிகாலை சுப்ரபாத சேவைக்கு வந்த பக்தர்களிடம் நடத்திய டிக்கெட்டுகளை பரிசோதித்தபோது போலி ஆதார் கார்டுடன் வந்தவர் பிடிபட்டார். தேவஸ்தான அதிகாரிகள் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக போலி ஆதார் கார்டை பயன்படுத்தி டிக்கெட் வாங்கிய பக்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் டிக்கெட்டுகளை தேவஸ்தான அதிகாரிகள் பரிசோதித்த பின்புதான் உள்ளே அனுமதிக்கிறார்கள். இந்தச் சோதனையின்போது ஒருவர் போலி ஆதார் கார்டு மூலம் தரிசன டிக்கெட் வாங்கி வந்திருப்பது தெரியவந்தது.
வியாழக்கிழமை அதிகாலை சுப்ரபாத சேவைக்கு வந்த பக்தர்களிடம் நடத்திய டிக்கெட்டுகளை பரிசோதித்தபோது போலி ஆதார் கார்டுடன் வந்தவர் பிடிபட்டார். தேவஸ்தான அதிகாரிகள் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வங்கி சர்வரை ஹேக் செய்து ரூ.16 கோடி அபேஸ்! சைபர் கிரிமினல்கள் கைவரிசை!
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், போலி ஆதார் மூலம் டிக்கெட் வாங்கிய நபர் பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீதர் என்று தெரியவந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆன்லைன் குலுக்கல் முறையில் சுப்ரபாத சேவை டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதேபோல போலி ஆதார் கார்டை பயன்படுத்தி பல முறை டிக்கெட் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 400 முறை குலுக்கலில் பதிவுசெய்து 20 முறை சுப்ரபாத சேவை டிக்கெட்டைப் பெற்றிருக்கிறார். திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உ.பி.யில் திப்ருகார் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்தில் 4 பேர் பலி; பல பயணிகள் காயம்